வல்வையில் கடந்த சில வருடங்களாக இயங்கி வரும் மூத்த பிரஜைகள் சங்கம் (Senior Citizen Association) தமது உறுப்பினர்களுக்கு பல சேவைகளை ஆற்றிவருகின்றது. இச்சங்கம் பருத்தித்துறை பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்ட ஒரு உத்தியோகபூர்வ அமைப்பாகும். சங்கத்தின் தொடர்ச்சியான தொழிற்பாடு காரணமாக சங்கத்திற்கு ஒரு நிரந்தர அலுவலகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் குறித்த அலுவலகத்தை அமைப்பதற்குரிய காணியை மூத்த பிரஜைகள் சங்கமே கொள்வனவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
இதற்கமைய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய சிறிய காணி ஒன்று வல்வை சிவகுரு பாடசாலை அருகில் இனம் காணப்பட்டுள்ளது. குறித்த காணியைக் கொள்வனவு செய்ய 2 லட்சம் ரூபா தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக மூத்த பிரஜைகள் சங்கம் வெளியிட்டுள்ள வேண்டுகோள் வருமாறு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.