பிரசித்திபெற்ற வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று இரவு நிகழவுள்ள மாபெரும் இந்திரவிழாவையொட்டி யாழின் வல்வெட்டித்துறை நகர் தயாரகிவருகின்றது.
பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள வல்வெட்டிதுறையின் ஊரணி முதல் ஊரிக்காடு வரையான, ரேவடி மற்றும் உதயசூரியன் கடற்கரை வீதி உள்ளடங்களான பகுதிகள் அலங்கரிக்கப்பட்டுவருகின்றன. வீதியின் இருமரங்கிலும் குலைகளுடன் கூடிய வாழை மரங்கள், தெருமூடி பந்தல்கள், பல இடங்களில் வானுயர்ந்த கட் அவுட்ஸ், மின்சார அலங்காரங்கள், அலங்கார வளைவுகள் என்பன அமைக்கப்பட்டு வருகின்றது.
இன்று மாலை 7 மணியளவில் ஆரம்பமாகும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் இந்திரவிழா நிகழ்வுகள் நாளை அதிகாலை வரை நீடிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இம்முறை ஊரிக்காடு சோடாக் கடையின் அருகாமையில் இசைக் கச்சேரி ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் ஊரிக்காடு, அம்மன் கோவிலடி, மதவடி, வல்வெட்டித்துறை சந்தி, ரேவடி ஒழுங்கை, வேம்படி, நெடியகாடு பிள்ளையார் கோவிலடி, மகளிர் மைதானம், ஊரணி தீர்த்தக் கடற்கரை ஆகிய இடங்களில் இந்திரவிழாவிற்காக தயாராகும் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.