ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இரு இலங்கையர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2024 (சனிக்கிழமை)
சீனாவிலிருந்து சவுதீஅரேபியாவின் Jeddah துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த True Confidence வணிகக் கப்பல் மீது யேமன் ஹூதி கிளர்ச்சியாளர் நேற்று முன்தினம் (07) காலை 11.30 அளவில் ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இத்தாக்குதலில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 3 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
குறித்த கப்பலில் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் (Security Guards) இருந்துள்ளதுடன், அவர்களில் இருவர் இலங்கையர்களாவர். நேபாள பிரஜை ஒருவரும் அதில் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.