வல்வை விளையாட்டுக் கழகம் அதன் வைர விழாவை முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று வல்வை தீருவில் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த உதைபந்தாட்ட சுற்றுத் தொடர் கடந்த 2020 இல் ஆரம்பக்கப்பட்ட போதிலும், கொரொனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நேற்றைய இறுதிப் போட்டியில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகமும் கொற்றாவத்தை ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதியது.
புலம்பெயர் அமைப்புக்கள், மற்றும் புலம் பெயர்ந்தோர் கணிசமான நிதிப் பங்களிப்புடன் இறுதிப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்றைய போட்டியில் 2000 ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாடுமீன் வெற்றி
போட்டியில் பாடுமீன் 2 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனாலும் பாடுமீன் பெற்ற இரண்டு கோல்களின் போது, பாடுமீன் ரசிகர்கள் சிலர் மைதானத்துக்குள் செல்ல முற்பட்டார்கள். இதனால் போட்டி சில நிமிடங்கள் தாமதப்படுத்தப்பட்டது.
முறுகல் நிலை
பாடுமீன் வெற்றி பெறும் தறுவாயில், பாடுமீன் ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் கூக்குரல்கள் இட முறுகல் நிலை உருவானது.
மதுபோதையில் சில ரசிகர்கள்
சில ரசிகர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகின்றது. இது நிலமையை மேலும் மோசம் அடையைச் செய்தது.
இருதரப்பும் சண்டை
போட்டி முடிந்தவுடன் இரு தரப்பும் பெறும் கை கலப்பில் ஈடுபட ஆரம்பித்தனர். இவ்வாறான பாரியதொரு சம்பவம் எதிர்பார்க்கப்படாமையாலும், போலீசார் முன் கூட்டியே அழைப்பு விடுக்கப்படாததாலும், நிலமை ஏற்பாட்டாளர்களின் கை மீறிச் சென்றது.
பலர் காயம்
சம்பவத்தை தொடர்ந்து பலர் காயம் பட்டனர். குறிப்பாக பாடுமீன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர்கள், ரசிகர்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட, கிட்டத்தட்ட அவர்களில் பெரும்பாலானோர் காயம் அடைந்தனர்.
ரேஞ்சர்ஸ் அணி ரசிகர்கள் எண்ணிக்கையில், பாடுமீன் அணி ரசிகர்களை விட அதிகமாக இருந்தததும், ரேஞ்சர்ஸ் அணியினருக்கு இதர சிலர் ஆதரவு கொடுத்ததுமே இதற்குக் காரணம் ஆகும்.
பின்னர் சண்டை இரண்டு கழகங்களையும் தாண்டி, வந்திருந்த விருந்தினர்கள், வல்வை விளையாட்டுக் கழக உறுப்பினர் பக்கமும் திரும்பியது.
(போட்டோ – மானங்கானை வல்வை, FB)
வயலூர் முருகையன் கோவிலுக்கு என தருவிக்கப்பட்டிருந்த ஓடுகள் உடைக்கப்பட்டு, அவை தாறுமாறாக எறியப்பட மேலும் சிலர் காயம் அடைந்தனர். ஒரு கல், விருந்தினராக அழக்கப்பட்ட - அண்மையில் இலங்கை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட வீரங்கனையையும் பதம் பார்த்தது.
காயம்பட்ட பாடுமீன் வீரர் ஒருவரின் மேல் அங்கியை கழட்டி புழிய, இரத்தம் வழிந்தது. அந்தளவுக்கு பலர் காயங்களுக்கு ஆளானார்கள்.
குருநகரிலிருந்து பாடுமீன் வீரர்கள் மற்றும் ரசிகர்களை ஏற்றிவந்திருந்த வானங்களும் சேதமாக்கப்பட்டன.
(நேற்றய சம்பவம் தொடர்பாக FB இல் பதிவான மீம்ஸ்)
கறை படிந்த சம்பவம்
சம்பவம் அங்கு விருந்தினர்களை வரவேற்ற குழந்தைகள், விருந்தினர்கள், ஏற்பாட்டாளர்கள் என அனைவரையும் திகைப்படையை செய்தது.
இலகுவில் கடந்த போய் விட முடியாத இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பாளிகள்?
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.