Tahiti bound -அன்னபூரணியன் 2வது கடற்பயணத்தை ஆவணப்படுத்தும் அரிய புத்தகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2013
வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டு, வல்வெட்டித்துறையிலிருந்து, கொழுப்பு வழியாக அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் 1936ம் ஆண்டு ஆவணி மாதம் 2ம் திகதி சென்றடைந்திருந்தது. அன்னபூரணி எனும் Florer ம் C Robinson எனும் பாய்மரக்கப்பல்.
வல்வை மாலுமிகள் இந்தப் பயணத்தில் வல்வையைச் சேர்ந்த தண்டையல், மற்றும் மாலுமிகள் என ஐவர் பயணித்திருந்தனர். சுமார் 2 வருடங்கள் பயணித்து Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்த பின் அன்னைபூரணி கப்பலானது ஏனைய வேறு சிப்பந்திகளால் பாரம் எடுக்கப்பட்டிருந்தது.
அன்னபூரணியின் (S.V.Florence C Robinson) Gloucester துறைமுகத்திலிருந்து பசுபிக் சமுத்திரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் தைகிற்றி (Tahiti) வரையான பயணத்தை விவரிக்கும் புத்தகமே Tahiti bound ஆகும்.
Donald .J. Lang Ley மற்றும் Holly .J . blake (பெண்மணி) ஆகியோரால் எழுதி ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம்
இப்பயணத்தில் வல்வெட்டித்துறையைச் சார்ந்த சிப்பந்திகள் எவரும் பங்கேற்காது விடினும் இப்புத்தகத்தில் முன்னால் பயணித்திருந்த எங்கள் சிப்பந்திகள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்னபூரணியின் சில சரியான தரவுகள் (Specifications) மற்றும் பாய்களின் பிரத்தியோக பாகங்களின் பெயர்கள் (ஆங்கில முறைப்படி) கொடுக்கப்பட்டுள்ளது.
ஏராளமான அரிய புகைப்படங்களைத் தாங்கியுள்ள இப்புத்தகம் 1998 ஆம் ஆண்டு முதற் பதிப்பாக ஐக்கிய அமெரிக்காவில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 218 பக்கங்களைக் கொண்டுள்ள இப்புத்தகம், தற்பொழுது பெறுவதற்கு அரிதான ஒன்றாகும். இவ்வரிய புத்தகம் பற்றி பலர் அறியும் வண்ணம் இதை எமக்குத் தந்தவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.