Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

இன்றைய நாளில் வல்வையில் – கடலில் மிதந்தார் யோகரெத்தினராசா

பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2024 (வெள்ளிக்கிழமை)
இன்றைய நாளான 28 ஆம் திகதி மார்ச் மாதம் 1980 ஆம் ஆண்டு மறைந்த திரு.துரைராசா யோகரெத்தினராசா அவர்கள்,  அதிகாலை 03.30 மணி தொடக்கம் 31 ஆம் திகதி வரை 57.5 மணித்தியாலங்கள் கடலில் மிதந்து சாதனை புரிந்தார்.
 
இச் சாதனை வல்வெட்டித்துறை ரேவடி கடற்பரப்பில் நடைபெற்றிருந்தது.
 
இவர் பற்றி எம்மால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஆவணம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 
 
வல்வைக் கடலில் ஒரு சாதனை
காலம் கடந்த ஒரு தகவல்
 
1980 ஆம் ஆண்டு காலப்பகுதியிலே
  வல்வைக் கடலிலே – வல்வை மைந்தன்
ஒருவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு
சாதனை நிகழ்வு, இதுவரை காலமும்
எம்மவற்கும், மற்றும் பல பிரதேசங்களிலும்
நாடுகளிலும் வதியும் எம்மினத்தவர்களுக்கும்  மற்
றோருக்கும் தகுந்த முறையிலே தெரிய
வராததால் இச் சாதனை நிகழ்வாம் இத்
தகவலை இணையத்தள வசதியுள்ள
இந்நேரத்திலாவது அறியத்தருவதிலே
மகிழ்ச்சி கொள்கின்றோம்.
 
வல்வைக் கடலிலே – ஒரு வியத்தகு சாதனை !
ஆழக்கடலிலே – தாழாத் தொப்பமாய் .......
கைகள் இரண்டினையும் ஒன்றாய் இணைத்து
கால்கள் இரண்டையும் ஒன்றாய்ப் பிணைத்துக்
கட்டிய நிலையிலே – கடலிலே தெப்பமாய் மிதந்தான்
வல்வை மைந்தன் திரு.துரைராசா யோகரெத்தினராசா
 
 
வல்வை மைந்தன் – சாதனை வீரன் - திரு.துரைராசா யோகரெத்தினராசா, தான் பிறந்த மண்ணை, தான் ஆடி ஓடித்திரிந்த ரேவடி மணற்பரப்பினைத், தன் அலைக்கரங்களால் தழுவி நின்று, ரேவடிக்கடற்பரப்பின் ஒரு பகுதியிலே கைகளையும், கால்களையும் கட்டிய நிலையிலே, ஆழமான பகுதியிலே தாழாத் தெப்பமாய் மிதந்தான் –ஆழக்கடலிலே கிடந்தான்~!
 
யார் இந்த யோகரெத்தினராசா?.. ... இவன் பிறந்ததும் வல்வை மண் – வளர்ந்ததும் வல்வை மண்ணே தான் !
வல்வைச்சந்தியிலிருந்து மேற்குப் பக்கமாகச் செல்லும் காங்கேசன்துறை வீதியிலே – இடது பக்க ஆரம்பத்திலே அமைந்துள்ள ஒரு சிறு ஒழுங்கை – வழங்கி வந்த பெயர் – இலந்தையடி ஒழுங்கை.
 
இந்த ஒழுங்கையை வதிவிடமாகக்கொண்டு இருந்த  திரு/ திருமதி துரைராசா நாகரத்தினம் அம்மாள் தம்பதிகளுக்கு மூத்தமகனாகப் பிறந்தவனே, மறைந்த சாதனை வீரன் துரைராசா யோகரெத்தினராசா. இவர்  பிறந்த காலம் 16.04.1944. இவருக்கு பின் பிறந்த சகோதரர்கள் து.விஜயரத்தினராசா (விஜயன் மாஸ்டர்), து.ஜெயரத்தினராசா, து.சோதிரெத்தினராசா .
 
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டு இருந்த திரு/திருமதி செந்திவேல் தங்கக்கண்டு தம்பதிகளின்ன் மகள் அமிர்தகெளரியைத் திருமணம் செய்து கொண்டார்.
 
மனைவி அமிர்தகெளரி யோகரெத்தினராசா
பிள்ளைகள் –சதானந்தன், சுதர்ஜினி, நிரஞ்சிதா, தாட்சாயினி, ரேவதி
 
நீரிலே மிதந்து – தெப்பமாய்க் கிடந்தது – ஊரறிய – உலகறிய – ஒரு சாதனை படைக்க வேண்டும் என்பது இவருடைய நெடுநாளைய விருப்பம், குறிக்கோள்.
 
தமது நண்பர்களிடமும் இது பற்றிக் பேசிக்கொள்வார்.  இந்தச் சாதனை நிகழ்வினை மேற்கொள்வதற்காக - சாதனையையை ஏற்படுத்துவதற்காகக் காலத்திற்குக்காலம் பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். தம்மை நன்றாகத் தயார்படுத்திய நிலையிலே, தான்சார்ந்திருந்த ரேவடி விளையாட்டுக் கழக மூத்த உறுப்பினர்களுடனும், வீரர்களுடனும் தொடர்பு கொண்டு – கலந்துரையாடியதுடன், தமக்குத் தேவையான அனுசரணைகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கும் படியும்  கேட்டுக் கொண்டார்.
 
தவிரவும், இவர்களுடாக ஏனைய கழகங்களுடனும், கழக உறுப்பினர்களுடனும் தொடர்பு கொண்டு தமது எண்ணத்தைக் தெரியப்படுத்திக் கொண்டதுடன், இவ் விடயத்திலே தமக்குத் தேவையான உதவிகளையும், ஒத்துழைப்பினையும் வழங்கும் படியும்  கேட்டுக்கொண்டார்.
 
அனைவரும் இவருடைய ஆர்வத்தையும் எண்ணத்தையும் மெச்சியதுடன், தேவையான ஒத்துழைப்பையும் சகலவிதமான உதவிகளையும் வழங்குவதற்கு முன் வந்தனர். இதனால் இவர்கள் அனைவரினதும் உறுதியையும் மனங்கொண்ட திரு. யோகரெத்தினராசா தமது எண்ணத்தைச் செயற்படுத்துவதற்கு உரியதருணத்தை எதிர்பார்த்த நிலையிலே தேவையான ஆயத்தங்களையும் செய்யத் தொடங்கினார்.
 
உரிய காலமும் நேரமும் கனிந்து வந்தது. 28.03.1980 இவருடைய சாதனை முயற்சிக்கு அனுகூலமாக இருந்த தன்மையில் இத்தினத்திலே தமது சாதனை முயற்சியை மேற்கொள்ள தீர்மானித்தார். இவ்விடயத்திலே இவருக்குப் பூரண ஒத்துழைப்புக் கொடுத்த ரேவடிவிளையாட்டுக்கழக உறுப்பினர்களும் ஏனைய கழக உறுப்பினர்களும் – வீரர்களும் மிக ஊக்கமுடன் செயற்பட்டனர்.
 
1953 ஆம் ஆண்டு, பாக்கு நீரிணையை முதலிலே நீந்திக்கடந்து சாதனையை ஏற்படுத்துவதற்காக மறைந்த நீச்சல் வீரன் தி.மு.நவரத்தினசாமிக்குக் களம் அமைத்துக் கொடுத்த வல்வை ரேவடிக் கடற்பரப்பு, 1963 ஆம் ஆண்டு தமது சாதனை முயற்சிகளையும் – நிகழ்வினையும் மேற்கொள்வதற்கான ஆரம்பமுயற்சிகள் யாவற்றிற்கும், சாதனை மன்னன் ஆழிக்குமரன் ஆனந்தனுக்குக் களம் அமைத்துக் கொடுத்த ரேவடிக் கடற்பரப்பு, வீரன் யோகரெத்தினராசாவின் சாதனை முயற்சிக்கும் களம் அமைத்துக் கொடுத்திட, தமது சாதனை முயற்சிகளை மேற்கொண்டு, – சாதனையை ஏற்படுத்தி அமையக்  களம் ஏற்படுத்திக் கொடுத்தமை –களமாகத் திகழ்ந்தமை, வல்வை ரேவடிக் கடற்பரப்பின் ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளமை குறிப்பிடக்கூடியதாகும்.
 
ஆரம்ப நிகழ்வாக, இவருடைய சாதனை நிகழ்வுக்கு தகுந்த ஓர் இடம், இவருடைய சாதனை நிகழ்வுக்கான ஆர்வலர்களுடைய விருப்பத்திற்கமைய,  தீர்மானத்திற்கமைய, தகுந்த ஓர் இடம் தெரிவு செய்யப்பட்டது.
 
ரேவடிக் கடற்பரப்பின் கரையிலிருந்து சுங்கப்பகுதிக்கு முன்பாக 200 யார்களுக்கு அப்பால் அமைந்துள்ள ஓர் இடம் குறிக்கப்பட்டது. இவருடைய சாதனை நிகழ்வுக்கு உரிய அனுசரணை வழங்குவதற்கான முறையிலே மிதக்கும் மேடை ஒன்றும் அமைக்கப்பட்டது.
 
இந்த மேடை, இவருக்கு மிக நெருக்கமான ஆர்வலர்களையும், அனுசரணையாளர்களையும் சுமந்து தாங்கக்கூடிய தன்மையிலான பலத்துடன் அமைக்கப்பட்டது. வலுவுள்ளதாக ஏற்படுத்தப்பட்டது. இவர் சாதனை நிகழ்வினை ஏற்படுத்தும் குறிப்பிடக்கூடிய இடத்திற்கு, ஓரளவு தூரத்தில் இவருக்கு அண்மித்ததாக  அமைக்கப்பட்டது. இம் மேடையிலே சாதனை நிகழ்வினைக் கண்டுகளிப்பதற்கான ஆர்வலர்களையும், நிகழ்வுக்கு சாட்சிகளாகத் தம்மை அடையாளம் படுத்தக்கூடிய தகுதி வாய்ந்த உத்தியோகத்தவர்களையும், வைத்திய அதிகாரிகளையும், முதலுதவி செய்யக்கூடிய தகுதியாளர்களையும் மேடையிலே கொண்டிருப்பதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டன.
 
யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதிநிதியையும் அம்மேடையிலே அமர வைப்பதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டன. யாவும் துரித கதியிலே நிறைவேற்றப்பட்டன .
 
சாதனை நிகழ்வுக்கான குறிப்பிட்ட தினத்தில் ஆழிக்குமரன் ஆனந்தன் சரியான நேரத்திற்கு அவ்விடம் வந்தார். நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்காக சாதனை வீரன் யோகரெத்தினராசாவுடன் தானும் நீரிலே குதித்தார்.
 
 
வீரன் யோகரெத்தினராசாவின் உடல் முழுவதும் கிறீஸ் பூசப்பட்டிருந்தது. மூக்கினுள்ளும்,காதுகளிலும் நீர் புகாதவாறு உரிய பாதுகாப்பு செய்யப்பட்டது.
 
சரியாக நேரம் மாலை 4.45.  நிகழ்வினை முகமலர்ச்சியுடன் ஆரம்பித்து வைத்தார் ஆழிக்குமரன். கடற்பகுதி எங்கும் ஒரேகூச்சல், கரகோஷம், வீரன் யோகரெத்தினராசாவும் மனத்தெம்புடனும், முகம்மலர்ச்சியுடனும் நீரிலே மிதக்கத் தொடங்கினார் .
 
கைகள் இரண்டு இணைத்துக்கட்டப்பட்ட நிலையிலே, கால்கள் இரண்டும் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையிலே, தமது சாதனை நிகழ்வினை ஆரம்பித்தார். நேரம் நகரத் தொடங்கியது, நிமிடங்கள் மணித்தியாலங்களாகின. வீரன் மிதந்த கடற்பகுதியின் ஆழம்  21 அடியாக அமைந்திருந்தது
 
கைகள் இரண்டும் இணைத்துக்கட்டப்பட்ட  பொழுதிலும், கடல் கொந்தளிப்புடன் காணப்பட்ட தன்மையாலும், அலைகளின் நீர்ச்சிதறல்கள் கடுமையாக இருந்தமையினாலும், வீரனுடைய மூக்குனுள் புகுந்து விடும் நீரைத் தடுப்பதற்காக இவரின் கைகள் ஓரளவு தளர்த்தப்பட்டன. கொந்தளிப்பான கடலிலும் அவரது முகம் மலர்ச்சியாகவே விளங்கியது 
 
இச் சாதனை நிகழ்வின் நேரத்திலே இவர் எந்த விதமான திண்ம  உணவுகளையும் உட்கொள்ளவில்லை. ஓரளவு திரவ பதார்த்தத்தையே இடையிடையே பருகி வந்தார் . வீவா, குளுக்கோஸ் கலவையையே மருத்துவ ஆலோசகர்களின் ஆலோசனைப்படி பருகினார்.
 
ஆரம்பத்திலேயே இவருடைய உடம்பிலே  கிறிஸ் பூசப்பட்ட தன்மையில் உடல் வெப்பம் ஓரளவு சீரான நிலையிலேயே அமைந்திருந்தது. ஆயினும் 29.03.80 அதிகாலை 03.30 மணியளவில் இவர் மேடைக்குகொண்டு வந்து  மீண்டும் கிறீஸ் பூசப்பட்டது. மீண்டும் 5 நிமிடத்தில் நீரிலே இறக்கித் தெப்பமானர்.

 
சற்று நேரத்தில் இவர் தமது கால்களால் நீரினுள்ளேயே கால்களைத் தூக்கி அடிவைத்து நடக்கத் தொடங்கினார். கால்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படாத தன்மைக்காகவே இவ்வாறு நடந்தார்.
 
சுமார் 20 அடிகள் தூரத்திற்கு மாத்திரம் நடந்தார். ஆயினும் கைகள் கட்டப்பட்டநிலையிலேயே இருந்தன. காலை வெய்யில் காரணத்தால் கடல் மிகத் தெளிவுடன் இருந்தமையால், இவர் கால்களைத் தூக்கி மாறிமாறி  அடி வைத்து நடப்பதை பலரும் அவதானித்தனர்.
 
மேடையிலேஅமர்ந்திருந்த யாழ்மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரியும், விளையாட்டுத் துறை அமைச்சின்  பிரதிநிதியுமாக இருந்த உயர் அதிகாரியும் இதனை நன்கு அவதானித்த வண்ணமே இருந்தார். இவருடைய செயற்பாடுகள் யாவும் மேடையிலே இருந்தவர்களையும், சிறு படகிலே இருந்து கண்டு களித்துக் கொண்டிருந்த இவரின்  ஆர்வலர்களையும் மனம் குளிரச் செய்தன. தமது கண்களுக்கு முன்னாலேயே வீரனின் சாதனை நிகழ்வினை – சாகச நிகழ்வினை அவதானித்த பலரும் பெரிதும் வியப்படைந்தனர்.
 
சாதனை வீரனுடைய சாதனை நிகழ்வினைக் காண்பதற்காகவும் பாராட்டினைத் தெரிவிற்பதற்காகவும், அரசியல்வாதிகள் ஊர்ப் பிரமுகர்கள் பொதுத்தாபனப் பிரதிநிதிகள் ஊர் மன்றத் தலைவர்கள் என்ற தன்மையில் ரேவடி மணற்பரப்பிலும் – கடற்பரப்பிலும் நிறைந்திருந்தார்கள்.
 
ரேவடி விளையாட்டுக்கழக முக்கியஸ்த்தவர்கள் உட்பட வல்வையின் விளையாட்டுக்கழக முக்கியஸ்தவர்கள் என்ற தன்மையில் பலரும் அங்கே நிறைந்திருந்த  தன்மையை நன்கு அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
 
கண்கண்ட சாட்சிகள் என அடையாளப்படுத்தக்கூடிய தகுதிவாய்ந்த பலரும் அங்கு வந்திருந்தார்கள். ஆழிக்குமரன் சாதனை மன்னன் – ஊர்ப்பிரமுகன் என்ற தன்மையில் மாத்திரமன்றி தான் சார்ந்திருந்த முன்னணி விளையாட்டுக்கழகமாகிய “கின்றோஸ்” கழகத்தின் சார்பிலே வந்திருந்தமை யாவருக்கும் மனநிறைவைக் கொடுத்திருந்தது. திருவாளர் எஸ்.சத்தியசீலன், சி.நாணயக்காரா ஆகியோர் தாம் சார்ந்திருந்த ஒரு முன்னணி விளையாட்டுக்கழகத்தின் (ADVENTVRES CLUB) சார்பிலே பிரசன்னமாகி இருந்தார்கள்.
 
யாழ்.மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரியும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை பிரதிநிதியுமான
திரு.எஸ்.செல்வராசாவும் சாதனை நிகழ்வு ஆரம்பித்த நேரம் தொடக்கம் மறுநாள் காலை 07.00 மணிவரையிலே அவர் மிதக்கும் மேடையிலே மிகவும் அவதானத்துடனும் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

 
இவரின் வருகையும் அவதானிப்புக்களும் ஒரு உத்தியோகபூர்வமான நிகழ்வாக எழுதப்பட்டக் கூடியதாக அமைந்திருந்தது. அப்போதைய வல்வை நகராட்சி மன்றத்  தலைவர் திரு.ச.ஞானமூர்த்தி, வல்வை விளையாட்டுக்கழக பிரதிநிதியாக திரு.என்.யோகசந்திரன் மற்றும் விளையாட்டுக் கழகத் தலைவர்கள், உறுப்பினர்கள் பாராளுமன்றபிரதிநிதிகள் திரு.க.துரைரத்தினம், திரு.மு.சிவா சிதம்பரம், எம் .இராமலிங்கம், திரு.ஆ.அமிர்தலிங்கம்,திருமதி மங்கையக்கரசி அமிர்தலிங்கம், காரைநகர் கடற்படைத் தளப் பொறுப்பதிகாரி எல்.என்.ஜி.விக்கிரமரத்னா, பாடசாலை அதிபர்கள் கே.செல்வநாயகம், திரு.எஸ்.சத்தியமூர்த்தி, வட்டாரக் கல்வி அதிகாரி திரு.வி.ஈசுரபாதம், பேராசிரியர் வி.கே.கணேசலிங்கம், லயன்கழகப் பிரதிநிதி லயன். ஆர்.என். இளங்கோவன், வல்வை – பருத்தித்துறை பொலீஸ் நிலையைப் பொறுப்பாளர்கள், சட்டத்தரணி திரு.சோ.சிவனருட்சுந்தரம், லயன் கழகப் பிரதிநிதி எஸ்.சபாரத்தினம், வைத்திய அதிகாரிஎம்.செல்வசந்திரன்,
உதவி அசரசாங்க அதிபர் திரு.வை.வேலும் மயிலும், மகாவலி அபிவிருத்தி சபைப்பிரதிநிதி எம்.ஜ.குணவர்த்தனா, இடைக்காடு வெளிக்கழக உத்தியோகத்தவர்கள், தபால் அதிபர் திரு.எஸ்.செல்வத்துரை, அதிபர் சங்கரதாஸ், பருத்தித்துறை லயன் கழகப் பிரதிநிதி லயன் கே.ஞானசபாபதி ஆகியோர் அங்கே சமூகமளித்திருந்தோருள் குறிப்பிடக்கூடியோயோராவர்.
 
வல்வை சிதம்பரக்கல்லூரி உயர்தரவகுப்பு மாணவர்கள் மிதப்பு சாதனையுடன் தொடர்புடைய முக்கியமான பதிவுகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடக்கூடியமையாகும்.
 
அன்றைய ஜக்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தார்கள். யாழ் மாவட்ட அமைப்பாளர் திரு. எஸ். சந்திரசேகரம் குறிப்பிடக்கூடியவராவார். இவ்வரிசையில் க.கணேசலிங்கமும் மற்றொருவராவர்.
 
பத்திரிகையாளர்.இ.கி.தில்லைநாதனும் ஒருவராவர் மற்றும் பலர் நேரிலே வந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அனுப்பியிருந்தனர். சென்னை அண்ணாசாலையிலிருந்து நடிகர் செந்திலும் வாழ்த்து அனுப்பியிருந்தமையும் குறிப்பிடக்கூடியதாகும். வீரன் யோகரெத்தினராசாவின் மனைவி, பிள்ளைகளும், தாயார், மற்றும் சகோதரரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்.

 
கடல் அலைகள் சாதனை வீரனைத் தழுவி நிற்க வீரன் யோகரெத்தினராசா. தம்மை மறந்த நிலையிலே அமைதியாக கடல் நீரின் மேற்பரப்பிலே மிதந்து கொண்டேயிருந்தார். நேரமும் நகர்ந்து கொண்டிருந்தது. வீரனும் மிதந்து கொண்டேயிருந்தான். சுமார் 50 மணித்தியாலயங்களும் கடந்து விட்ட நிலையிலே மேலும் நீர் மிதப்பு தொடர்ந்து கொண்டேயிருந்தது.
 
தமது சாதனையை எத்தனை மணிநேரத்துடன் நிறைவு செய்வது என்ற சிந்தனையில்லாமல் மிதப்பிலே கருத்தாக இருந்தான் வீரன் யோகரெத்தினராசா. நேரம் செல்லச் செல்ல மிதக்கும் மேடையிலே இருந்த உத்தியோகத்தவர்கள், ஆவலர்கள் வீரனின் உடல் நலம் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்கள்.
 
அவனுடைய உடல் நிலையிலும் கருத்தையும் கவனத்தையும் செலுத்தத் தொடங்கினார்கள். நீர் மிதப்பு நேரத்தைக் கருத்திற் கொண்டு வீரனைத் தொடர்ந்தும் நீரிலே தெப்பமாய் மாறி மிதக்கவிடாமல் குறிப்பிட்ட நேரத்துடன் நிறுத்தச் செய்வதற்கு தீர்மானித்தார்கள்.
 
தமது ஆலோசனைகளையும், நல்லெண்ணத்தின் மீதான தீர்மானங்களையும் வீரனிடம் பேசிக் கதைத்தார்கள். சாதனையாளரும் அவர்களின் கருத்துக்களையும் நல்ல எண்ணங்களையும் தமது கவனத்திற்கொண்டு அனைவரினதும் முடிவுகளையும் ஏற்றுக்கொண்டார்.
 
காற்றும் சற்று வேகமாக வீசத்தொடங்கியது. அலை கடல் ஆர்ப்பரிக்கும் கடல் என்ற தன்மையில்  கடலும் தன்னுடைய குணத்தை மாற்றத் தொடங்கியது. இந்த நிலையிலே தொடர்ந்தும் நீரிலே மிதப்பது சிரமமாகத் தோன்றியது.

 
அங்கே இருந்தவர்களுக்கு மாத்திரமன்றி அவருமே தான் இந்த நிலையிலே தமது சாதனை நிகழ்வினை நிறுத்திக்கொள்வதற்குச் சம்மதித்தார். சாதனை நிகழ்வினைக் கண்டு களித்து வியந்து நின்றவர்கள் வீரனை தம்முடைய முயற்சியினால், வீரனுடைய மனப்பூர்வமான விருப்பத்துடன் தூக்கி மிதப்பு மேடையிலே ஏற்றிக்கொண்டார்.
 
கரகோஷம் வானைப் பிளந்தது, கடல் அலைகளும் ஓரளவு பொங்கி எழுந்து மீண்டும் தாழப்  பணிந்தது. கடல் இரைச்சலுக்கு மேலாக ஆர்வலர்களின் கரகோஷம் வானை முட்டியது. கரகோஷக் கூச்சல், வீரன் இந்த நிலையிலும் மகிழ்ச்சியுடனேயே இருந்தான். புன்னகை பூத்தமுகத்துடன்.
 
அங்கே இருந்த வைத்தியர்கள் அவருடைய உடலைப் பரிசோதித்தார்கள் டாக்டர்கள் என்ன சொல்வார்களோ என்று யாவரும் அவர்களின் முகங்களையே அவதானித்தார்கள். டாக்டர்களின் முகங்களிலோ மகிழ்ச்சி. வீரன் தரைக்குக் கொண்டு வரப்பட்டான்.
 
உற்றோரும் மற்றோரும் பாசபந்தங்களும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவந்தார்கள். மலர் மாலைகள் கழுத்தை நிறைத்தன. அலங்கரித்தன. எல்லோரும் அவனைக் கட்டித்தழுவிடத் துடித்தார்கள். வீரனுடைய உடல் நலத்தை மனங்கொண்ட நிலையிலே யாவரும் அமைதி காத்தார்கள்.

 
ரேவடி மணற்பரப்பும், மிகுந்த ஆரவரத்துடன் அமைதி காத்தது. தமது வியத்தகு சாதனையை 72 மணித்தியாலத்திற்கு மேலாக தொடர்ந்த தன்மையில் வீரன் யோகரெத்தினராசா மிகவும் இறும்பூதெய்திய நிலையில் காணப்பட்டார்.
 
மக்கள் கூட்டம், ஆர்வலர் கூட்டம், உற்றார் உறவினர், பாசபந்தந்கள் யாவரும் தத்தமது உவகை உணர்வுகளை வல்வைக் கடலின் மேலும் – மணற்பரப்பின் மீதும் விதைத்துவிட்டுத் தத்தமது இல்லங்களுக்குத் திரும்பினார்கள்.
 
வீரனை ஊர்வலமாக அழைத்துச் சென்ற மக்கள் கூட்டம் ரேவடிக் கழக மைதானத்திற்கு அருகே அமைந்திருந்த அவரது இல்லத்திலே ஆறுதலாக  அவரை அமரவைத்து,  அவரை வாழ்த்தி வெளியேறினார்கள்.
 
அமரர்.வஆ.அதிரூபசிங்கம்

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
VEDA ஆவணி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசகம் முற்றோதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2024 (சனிக்கிழமை)
நீச்சல் போட்டியில் தனுஜா தங்கம் வென்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆடி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகா கும்பாபிஷேகம் விஞ்ஞாபனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
VEDA ஆனி மாத கணக்கு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/12/2024 (வெள்ளிக்கிழமை)
இலங்கையின் நீர் வளங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
சிறந்த கணக்கறிக்கை மற்றும் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான மதிப்பீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - (72) - யாழ்ப்பாணத்து You tube காரர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி. சின்னத்தங்கம் வைரமுத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
யாழ் - தமிழகத்தை நோக்கி நகரவுள்ள தாழ்முக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2024 (புதன்கிழமை)
ஆசிய பளுதூக்கலில் 3 ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
சிறந்த மனவிருத்தி பாடசாலையாக தேர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2024 (திங்கட்கிழமை)
மாற்ற அரசியலும்....வலி.வடக்கு மீள்குடியேற்றமும்..
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வாங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
பலாலி விமான நிலையத்தில் அசெளகரியங்கள் எனின் முறையிட தொலைபேசி இலக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2024 (வெள்ளிக்கிழமை)
Chess போட்டியில் கஜிஷனா 2 ஆம் இடத்துக்கு முன்னேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
ஈழத்து கூத்தாளுமை அண்ணாவி பொன்னம்பலம் காலமானார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - கீர்த்தனா ராஜ்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
கலைச்சோலை வருடாந்த நாட்காட்டி 2025 (தரவிறக்கம் செய்யலாம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2024 (செவ்வாய்க்கிழமை)
சண்முகத்தின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2024 (திங்கட்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2034>>>
SunMonTueWedThuFriSat
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai