பருத்தித்துறை, சாவகச்சேரி நகரசபை வரவு செலவுத் திட்டங்கள் நிறைவேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2021 (வெள்ளிக்கிழமை)
சாவகச்சேரி நகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்றைய தினம் ஏகமனதாக நிறைவேற்ற்றப்பட்டுள்ளது. 18 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 14 பேர் ஏகமனதாக திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். நால்வர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதே போன்று பருத்தித்துறை நகரசபைக்கான 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் கடந்த வாரம் ஏகமனதாக நிறைவேற்ற்றப்பட்டுள்ளது.
இதேவேளை வல்வை நகரசபைக்காக 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 2 முறையும் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வல்வை நகரசபையுடன் ஒப்பிடும் போது, சாவகச்சேரி நகரசபை மற்றும் பருத்தித்துறை நகரசபை வருவாய் கூடிய நகரசபைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.