துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 82. அதிகாலை 4.40 மணிக்கு சோ உயிர் பிரிந்ததாக, தமிழக ஊடங்ககளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துக் கொடுத்திருந்தது.
ஜெயலலிதாவும், சோ ராமசாமி நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அரசியலில் ஜெயலலிதாவுக்கு சோ ராமசாமி ஒரு ஆலோசகாக இருந்து வந்தவர் ஆவார்.
சோ ராமசாமி மிகத் தீவிர விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்து துக்ளக் இதழிழ் உட்பட ஊடகங்களில் விடுதலைப் புலிகளை மிகத் தீவிரமாக விமர்சித்து வந்திருந்தார்.
2003 ஆம் ஆண்டு இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மேற்கொண்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பின் பின்னர் இது பற்றி தனது பதிவினை வெளியிட்டிருந்த சோ ராமசாமி 'பிரபாகரன் தமிழில் தடுமாற.... அன்ரன் பாலசிங்கம் ஆங்கிலத்தில் தடுமாற...... என குறித்த நேர்காணலை விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.