வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை உள்ள நீண்டகாலமாக உள்ள குறைபாடுகளையும் பொதுமக்களின் ஆதங்களும், வல்வை புலம் பெயர்ந்த நலன்விரிம்பிகளின் வேண்டடுகோளுக்கு இணங்க வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலை நலன்புரிசங்கமும் இணைந்து வடமாகண ஆளுநரை கடந்த மாதம் சந்தித்து கலந்துரையாடல்மூலம் ஆளுனரின் வேண்டடுகோளுக்கு அமைவாக நேற்றைய தினம் மாலை வல்வெட்டித்துறை பிதேச வைத்தியசாலயில் அதன் மாவட்ட வைத்திய அதிகாரி Dr மாதவநாத் (மாதவன்) தலைமையில் (மாகாண சுகாதாரப்பணிப்பாளர் ) Dr சமன் பத்திரானா ,மற்றும் (பிராந்திய சுகாதார பணிப்பாளர்) Dr. கேதீஸ்வரன் ஆகியோர் வல்வெட்டித்துறை பொது அமைப்புகள் , நலன் விரும்பிகள் மற்றும் வல்வை மக்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெற்றது. அங்கு வருகை தந்த சுகாதார பணிப்பாள்களிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டு (அங்கு வருகை தந்த வல்வையை சேர்ந்த மருத்துவர்கள் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம், புத்தி ஜீவிகள், பொது மக்கள் பலரும் தங்கள் கருத்துக்களையும் பொதுமக்களின் ஆதங்கத்தையும் தெரிவித்ததின் மூலம் கலந்துரையாடலின்பின் வல்வெட்டித்துறை ஊறணி மாவட்ட வைத்தியசாலையில் பின்வரும் குறைபாடுகள் தீர்க்கப்படும் என பலரது கருத்து பரிமாற்றத்தின்பின் இணங்கியுள்ளார்கள்.
1. உடனடியாக மகப்பேறு கிளினிககை இயங்கசெய்வது என்றும் மாதம் இரு முறை மகபேற்று நிபுணர் வருகை தருவதாகவும். கிழமைக்கு ஒரு தரம் பொது வைத்திய நிபுணர் வருகை தருவதாகவும்
2. இரத்த பரிசோதனனையை துரிதமாக பெற அல்லது தற்காலிகமாக (MLT) இரத்தபரிசோதிப்பவரை ஒழுங்குபண்னுவதாகவும்
3. OPD யில் நோயாளர்களை தாமதம் ஏற்படாமல் மேலதிக வைத்தியரை ஈடுபடவைப்பதாகவும்
4. இறந்த உடல்களை இங்கேயே பிண அறை வசதிகளையும் பிரேதபரிசோதனைகளை செய்ய ஒழுங்கு செய்வதாகவும்.
5. வைத்திய சாலை புணரமைத்து தருவதுக்கு ஏற்ற வரைவை தருமாறும் கோரியுள்ளார்கள்.
6.மின்பிறப்பாக்கிக்கு உடனடி குறைபாடுகளை நிவர்த்திசெய்வதாகவும்.
7. இதன் முன்னேற்றத்தை மூன்று மாதத்துக்குபின் மீண்டும் கூடி ஆராய்வதாகவும் இணங்கியுள்ளார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.