ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு (Spratly Islands)அப்பால் கடலில் மீன்பிடி கப்பலில் சென்ற 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள், கப்பல் சேதமடைந்து தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டனர் என அறிவிக்கப் பட்டு ள்ளது.
வியட்நாம் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (Vietnam RCC) செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று, மியான்மர் கொடியுடன் 303 இலங்கையர்களுடன் கனடாவுக்குச் செல்வதாக சந்தேகிக்கப்படும் Lady R3 என்ற கப்பல் ஆபத்தில் (distress) இருப்பதாக ஏஜென்சிக்கு செய்தி கிடைத்தது.
நவம்பர் 5 ஆம் திகதி, வியட்னாமின் Vung Tau துறை முகத்தில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, அதன் இயந்திர அறையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது கடல் சீற்றமாக இருந்தது.
மையம் பின்னர் கப்பலை தொடர்பு கொள்ள முயன்றது மற்றும் அருகிலுள்ள மற்ற கப்பல்களுக்கு அவசர சமிக்ஞைகளை ஒலி பரப்பியது.
திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஜப்பானியக் கொடியுடன் கூடிய ஹீலியோஸ் லீடர் கப்பல் அந்தப் பகுதியில் இருப்பதைக் கண்டறிந்து, லேடி R3 கப்பலில் இருந்தவர்களை ஒரு மாற்றுப்பாதையில் சென்று மீட்கும்படி கேட்டுக் கொண்டது.
ஜப்பானிய கப்பலால் பாதிக்கப்பட்ட படகை அடைய முடிந்தது, அதன் பணியாளர்கள் பீதியில் இருந்தனர்.
பின்னர் பயணிகளை மீட்டதுடன், தேவையானவர்களுக்கு மருத்துவ உதவியும் அளித்தது.
மீட்புமையம் மேலும் ஐந்து கப்பல்களைத் திரட்டி, தேவைப்பட்டால் ஆதரவை வழங்குவதற்காக அந்தப் பகுதியை வட்டமிடச் சொன்னது.
264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் செவ்வாய்கிழமைக்குள் Vung Tau ஐ அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை கப்பல் ஆபத்தான நிலையில் இருந்த போது படகில் இருந்த இலங்கை பிரஜை ஒருவர் கடற்படையை தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும் இதையடுத்து கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை இலங்கை கடற்படை நாடியது.
படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கிச் செல்வதாக சிங்கப்பூர் அதிகாரிகள் பின்னர் இலங்கைக்கு அறிவித்ததாக கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா நேற்று தெரிவித்திருந்தார் எனவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.