தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த சீலன், ரகு (குண்டப்பா) மற்றும் புலேந்தின் போன்றவர்களுக்கு சிகிச்சையளித்ததற்காக கைது செய்யப்பட்டு (1983) வெலிகடை சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, வண பிதா சிங்கராசா, மற்றும் விரிவுரையாளர் நித்தியானந்தன் போன்றவர்களுடன் இருந்து பின் மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி இந்தியா சென்று விடுதலைப் புலிகளின் TRO அமைப்பின் தலமைப் பொறுப்பை வகித்தவரும், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம், மற்றும் அடேல் பாலசிங்கம் மற்றும் யோகி போன்றவர்களுடன் உடனிருந்து பணியாற்றியவரும், விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவுக்கு ஆரம்ப காலங்களில் பயிற்சியளித்தவரும், முல்லைத்தீவு மாவட்ட வைத்திய பொறுப்பதிகாரியாக (RBHS) பணியாற்றியவரும்,
கணுக்கேணி முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்டவருமான Doctor T.W ஜெயகுலராஜா
அவர்கள் நேற்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் காலமானார்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று புனித மத்தியா ஆலய சேமக்காலையில் நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.