யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் தனியார் பேருந்துகளின் உள்ளூர், மற்றும் கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கான இரவு நேர சேவைகள் எதிர்வரும் 15 முதல் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.
தனியார் பேருந்தின் உள்ளூர் சேவை பஸ்கள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்தது புறப்பட்டு தற்போது இயங்கி வரும் இடங்களில் 10 நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும். அதே போல் வெளியிடங்களில் இருந்து வரும் பிரயாணிகள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இறக்கப்படுவர்.
இ.போ.ச. பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வெளிமாவட்டங்களுக்கும் செல்லும் நீண்ட தூரத்திற்கு பயணிக்கும் பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதியினூடாக சத்திரச்சந்தியை அடைந்து அங்கிருந்து கே.கே.எஸ் வீதியூடாக சென்று பிரதான வீதியை அடைந்து வெளிமாவட்டங்களுக்கான பயணத்தினை மேற்கொள்ளும்.
வெளிமாவட்டங்களில் இருந்துவரும் பேருந்துகளும் இப்பாதையையே பயன்படுத்த வேண்டும். இப்பாதை ஒழுங்குமுறையானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இ.போ.ச பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் நீண்டதூர பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதியூடாக வேம்படிச் சந்திக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.