மயிலிட்டி மீ்ன்பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப்பணிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2022 (புதன்கிழமை)
மயிலிட்டி மீ்ன்பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகவுள்ளன. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மயிலிட்டி துறைமுகம் கடந்த ஆட்சியில் விடுவிக்கப்பட்டு முதல்கட்ட புனரமைப்பு பணிகள் நிறைவுற்று கடந்த 2019 ஆம் ஆண்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2 ஆம் கட்ட புனரமைப்பு பணிகளை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன இப் புனரமைப்பு பணிகள் ஒரு வருட காலத்தில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் மயிலிட்டித் துறைமுகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரண்டாம் கட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவெடுப்பதற்கா ஆலோசனைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.
துறைமுகத்தின் அலை தடுப்பணை கற்கள் புனரமைப்பு (Main Breakwater பகுதி அகலிப்பு , சிறிய படகுகள் நிறுத்துவதற்கான இறங்குதுறை அமைத்தல், துறைமுக பணியாளர்களுக்கான அலுவலக கட்டடம் அமைத்தல் என பல வேலைகள் இடம்பெறவுள்ளன தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.