இலங்கையை நோக்கி நகரும் தாழமுக்கம், பலத்த காற்றுடன் பரவலாக மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2022 (வியாழக்கிழமை)
திருகோணமலைக்கு தென் கிழக்காக உருவான தாழமுக்கம் மேலும் தீவிரமடைந்து தற்பொழுது இலங்கையின் வட பகுதியை நோக்கி நகருகின்றது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆனாலும் இந்திய வளி மண்டலவியல் திணைக்களம், குறித்த தாழ முக்கம் எதிர்வரும் 12 ஆம் திகதிக்குள் தமிழகத்தின் பாண்டிச்சேரியை கடக்கும் என அறிவித்துள்ளது.
இதே வேளை யாழில் தற்பொழுது பரவலாக கடும் மழை மாலையில் இருந்து பெய்து வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.