இந்திய இலங்கை அரசிகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து 1987 யாழ் நல்லூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறை பொறுப்பாளர் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு தினம் மழைக்கு மத்தியில் இன்று தமிழர் பகுதிகளில் முன்னெடுக்குபடுகிறது.
இதேவேளை திலீபன் நினைவேந்தல் வல்வை ஆலடி பகுதியில் அமைந்துள்ள எம் ஜி ஆர் சதுக்கத்தில் அமைக்கப்பட்ட விசேட பந்தலில் கடந்த 12 தினங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இறுதி நாளான இன்று ஈழ புரட்ச்சி கானங்கள் மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.
அஞ்சலி நிகழ்வுகள் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின. நினைவுச்சுடர் மற்றும் மலர் அணிவித்தலை மாவீரர் உறவினர்கள் நிகழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நினைவு உரைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு M K சிவாஜிலிங்கம் மற்றும் ஆகியோர் நிகழ்த்தினர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.