சத்தியநாதனின் திருவுருவப் படம் நாளை திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2017 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பிரதான வீதியில் வன்னிச்சி அம்மன் கோயிலடியில் அமைந்துள்ள பழைய சத்திய நாதனின் சிலையடியில் நாளை மாலை 06:05 மணிக்கு அகல் விளக்கு ஏற்றப்பட்டு சத்திய நாதனின் உருவப் படம் திறந்து வைக்கப்படவுள்ளது.
மேற்குறித்த நிகழ்வு தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால்(National forum of tamil culture) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சங்கர் என அழைக்கப்படட சத்திய நாதன் அவர்களே விடுதலைப் புலிகள் அமைப்பில் மரணமான முதலாவது உறுப்பினர் ஆவார். இவரின் மறைவு நாளான கார்த்திகை 27 ஆம் நாளே பின்னர் மாவீரர் நாளாக வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இன்று மாலையும் தீருவில் தூபி பகுதியில் சிரமதான பணிகள் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.