1983 ஜூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டதமிழ் அரசியல் கைதிகளும், தமிழர் ஆயுத விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஸ்தாபாகர்களுமான திரு. குட்டிமணி மற்றும் திரு. தங்கத்துரை இருவருக்கும் வல்வையில் சிலை வைக்கும் முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரெலோவினால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியில், 83 hஜூலை கலவரத்தில் சிறையில் கொல்லப்பட்ட இதர அரசியல் கைதிகளான ஜெகன் உட்பட்ட அனைவருக்குமான நினைவுக்கல் வெட்டுக்கள் பொறிக்கப் படவுள்ளன எனவும் தெரிவிக்கப் படுகின்றது.
குறித்த சிலைகள் மற்றும் கல்வெட்டுக்கள் வல்வை சந்தியையொட்டி, வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பிரதான வீதியில் சடையாண்டி பிள்ளையார் கோவிலுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கும் இடையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக சம்பந்தப்படட அரச அலுவலகங்களிடமிருந்து அனுமதி பெறும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிய வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.