நாகை - காங்கேசன்துறை இடையே புதிய 'சிவகங்கை' கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2023 (திங்கட்கிழமை)
நாகபட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 'இந்த்ஶ்ரீ கப்பல் சேவைகள் தனியார் நிறுவனத்தின்' (IndSri Ferry Services Pvt Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.
இக்கப்பல் சேவையை நடத்துவதற்கான பூர்வாங்க அனுமதிகள் இரண்டு அரசாங்கங்களிடம் இருந்தும் கிடைத்து விட்டன எனவும், இதற்காக இந்திய கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 'சிவகங்கை' என்ற கப்பல் தமது நிறுவனத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இக்கப்பல் டிசம்பர் நடுப்பகுதியில் நாகபட்டினத்திற்கு வந்து சேரும் என்றார் அவர். இக்கப்பலில் 150 பயணிகள் தலா 60 கிலோ பொதிகளுடன் (check in baggage) பயணிக்கலாம். ஓரு வழிப் பயணக்கட்டணமாக ₹4,250 மற்றும் வரிகளும் அறவிடப்படும்.
இலங்கை ரூபாயில் 17,000 மற்றும் வரிகள் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் / இந்தியாவின் முகவர்களான Oya Bookings Internatjonal Pvt Ltd அல்லது அவர்களின் துணை முகவர்களான இ சேவா மையங்களினூடாக அல்லது விரைவில் வெளியிடப்பட இருக்கும் android & iOS app மூலமாகவோ கப்பல் பயணத்துக்கான பதிவுகளை மேற்கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கண்டவாறு சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.