யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 47 பல்வகையான கற்கைநெறிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/02/2022 (திங்கட்கிழமை)
2022 ஆம் ஆண்டிற்கான NVQ சான்றிதழ் மற்றும் டிப்ளோமா தரம் என 47 பல்வகையான கற்கைநெறிகளுக்கு யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியினால் விண்ணப்பங்கள் கோரபட்டுள்ளன.
இந்த கற்கைகள் யாவும் முழுநேர கற்கைநெறி என்பதுடன் முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது. அத்துடன் தொழில் சார் கற்கை நெறியினை பயில்வோருக்கு மாதாந்தம் 4000 ரூபா வரையான உதவுத் தொகை மற்றும் பருவகாலச்சீட்டு என்பன வழ்ங்க்ப்படவுள்ளது.
பயில விரும்புவோர் விண்ணப்பங்களை மார்ச் 15 ஆம்திகதிக்கு முன்னர் பணிப்பாளர், தொழில்நுட்பவியல் கல்லூரி, யாழ்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளனர்.
மேலதிக விபரங்களை தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்துடன் அல்லது 021 222 0028 , 021 221 2402 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு பெற முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.