இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த Maersk Frankfurt என்னும் கொள்கலன் கப்பலில் நேற்றய தினம் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் அராபியக் கடலில் Karwar என்னும் இடத்திலிருந்து சுமார் 50 கடல் மைல்கள் (கோவாவிற்கு தென்மேற்காக சுமார் 102 கடல் மைல்கள்) தொலைவில் இடம்பெற்றது.
இந்திய கடலோர காவற்படையினர் (Indian Coast Guard), நெருப்பைக் கட்டுப்படுத்தும் விமானம் (Dornier) மற்றும் கப்பல்கள் Sujeet, Samrat சகிதம் தீயை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என தமது X தளத்தில் காணொளியுடன் கூடிய செய்தியை நேற்று வெளியிட்டுள்ளனர்.
இந்த வருடம் 2024 இல் கட்டப் பட்டுள்ள 256 மீட்டர் நீளமான இப் புதிய கப்பல் பனாமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.