வல்வை மண்ணை பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, இந்தியா, லண்டனை வ திவிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி கணேசநாதன் அவர்கள் (தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினரும் 1983 ஆம் ஆண்டு யூலை கலவரத்தில் வெலிக்கடை சிறையில் குட்டிமணி, தங்கத்துறையுடன் படுகொலை செய்யப்பட்டவருமான அமரர் ஜெகனின் தாயார்) அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லைசிற்றம்பலம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு. திருமதி சிதம்பரநாதன் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன் கணேசநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற திரு தி சுப்ரமணியம், காலஞ்சென்ற திருமதி செல்வரட்ணம் செல்வராஜா, காலஞ்சென்ற திரு தி கோபாலவடிவேல், காலஞ்சென்ற திருமதி நேசமணி ஏகாம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜேந்திரா, ரவிந்திரதாஸ், பரிமளா ஆகியோரின் மாமியாரும்,
ஜெகன், சௌமியா, சோபியா ஆகியோரின் பேரன்புமிகு பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்
25 – 06 – 2024 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு Tooting & Mitcham Community Sports Club Function Hall, Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF எனும் இடத்தில் நடைபெற்று
அங்கிருந்து
12:40 pm மணிக்கு North East Surrey Crematorium, Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU எனும் இடத்தில் தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
தகனம் முடிந்ததும், அதே Tooting & Mitcham Community Sports Club Function Hall இல் எம்முடன் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.