வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வச்சுந்தரம் குணசுந்தரம் (மணிவாசகர் அவர்களின் மைத்துனர்) அவர்கள் 14-02-2022 அன்று கனடாவில் (மொன்றியல்) காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குணசுந்தரம் செல்லபாக்கியம் ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம்(பண்டிதரப்பா) இலட்சுமிகாந்தம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னார் சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
நிமலன், மதிவதனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்டி(Andy) யின் மாமனாரும் ஆவார்.
இவர் ஞானவதி அவர்களின் அன்புத் தம்பியும்,
விஜயசுந்தரம், ஜெயசுந்தரம், காலஞ்சென்ற ஸ்ரீசுந்தரம் மற்றும் யசோதரன்(பவுண்), ரதி ஆகியோரின் பாசமிகு அண்ணனுமாவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சங்கரநாதன், கைலாசபதி மற்றும் வாலாம்பிகை, கருணாம்பிக்கை, நீலாம்பிகை, அமுதாம்பிகை, காலஞ்சென்ற முருகவேள் மற்றும் முத்துக்குமாரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனருமாவார்.
கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், அன்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.