இன்றைய நாளில் வல்வையில் - ரேவடியில் அமிர்தலிங்கத்தின் முதலாவது உரை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/07/2022 (சனிக்கிழமை)
இலங்கையில் 21/07/1977 அன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) தலைவர் திரு.அமிர்தலிங்கம் வெற்றிபெற்று முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவரானார். இதனைத் தொடர்ந்து திரு.அமிர்தலிங்கம் அவர்களின் முதலாவது உரை வல்வெட்டித்துறையில் பல நிகழ்வுகளைச் சந்தித்த ரேவடி கடற்கரையில் இடம் பெற்றது..
கீழே படத்தில் அமிர்தலிங்கம் ரேவடியில் உரையாற்றுவதையும் இடமிருந்து வலமாக அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசிதம்பரம், ராஜலிங்கம் மற்றும் சூசை தாசன் ஆகியோர் அம்ர்ந்திருப்பதையும் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
NAGULASIGAMANY NADANASIGAMANY (Canada)
Posted Date: July 30, 2022 at 11:03
அன்றைய வரவேற்புக் கூட்டத்திற்கு நானும் திரு,கனகமனோகரன் (சுட்டத்தரணி } அவர்களும் வவுனியா சென்று (அங்கு நடைபெற்ற எதிர்க் கட்சித்தலைவர் தெரிவு) நேரில்; பாராளுமன்ற உறுப'பினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வவுனியாவில் உதவி அரச அதிபராக இருந்த திரு,லங்காநேசன் (கனகமனோகரனின் மைத்துனர்) வீடு சென்று திரும்பினோம். அத்துடன் திரு.அமிர்தலிங்கம் அவர்களுக்கு வெள்ளை நிற அசோகா மலர்மாலை ஒன்றை அணியும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது
ந.நகுலசிகாமணி, கனடா.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.