யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் படகு விபத்துக்கு உள்ளானதில் கடற்றொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
மாதகல் பகுதியை சேர்ந்த இரு கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்காக படகில் நேற்றய தினம் புதன்கிழமை அதிகாலை கடலுக்கு சென்று இருந்தனர்.
அந்நிலையில் கடலில் படகு விபத்துக்குள்ளாகி மூழ்கிய நிலையில் ஒருவர் கரையை நோக்கி நீந்தி வந்த வேளை, பிறிதொரு படகில் பயணித்த சக கடற்றொழிலாளர்கள் கண்டு, அவரை மீட்டு கரை சேர்ந்தனர்.
காணாமல் போன கடற்றொழிலாளியை,சக கடற்றொழிலாளர்கள், கடற்படையினர் தொடர்ந்தும் கடலில் தேடி வருகின்றனர்.
நாகராசா பகீரதன் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.