கடந்தகாலச் சமூகத்திற்கும் நிகழ்காலச் சமூகத்திற்கும் இடையே நிலவும் நெருங்கிய உறவாடலே வரலாறாகும்.இவ்வரலாற்று ஆராய்ச்சி உலகின் பல்வேறு நாடுகளில் வளர்ச் சியடையாத காலகட்டத்தில் அந்நாடுகள் தொடர்பாக மக்களிடையே நிலவிய சுட்டுக் கதைகளும், ஐதீகங்களும் பெரும்பாலும் அந் நாடுகளின் கடந்தகாலச் சமூகத்தின் உண்மை வரலாறாகக் கருதப்படுவதுண்டு. ஆனால் வர லாற்று ஆராய்ச்சி பிற்காலத்தில் தனியொரு பிரிவாக பல்வேறு துறைகளுடன் இணைந்து வளர்ச்சியடைந்தபோது சுடந்த காலங்களில் ஒரு நாட்டின் வரலாறாகக் கருதப்பட்ட கட்டுக் கதைகளும், ஐதீகங்களும் அவற்றின் முக்கியத் துவத்தைப் படிப்படியாக இழக்கநேரிட்டது. இது இலங்கைக்கும் பொருந்தும் என்பதை அண்மைக்காலமாக இலங்கையில் வளர்ச்சி யடைந்துவரும் தொல்லியல் (Archaeology) மானிடவியல் (Anthropology) சமூகவியல் (Soci- ology) ஆய்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
இலங்கையின் ஆதிகால வரலாறு தொடர் பாக கடந்த இரு தசாப் தங்களுக்கு முன்னர் நிலவிய சுருத்துக்களுக்கும், சமகாலத்தில் நிலவு கின்ற கருத்துகளுக்குமிடையே அடிப்படைவேறு பாடுகள் இருப்பதனை அவதானிக்கலாம். இலங்கையில் தொல்லியல், மானிடவியல் முத லான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் வளர்ச்சி யடையாத காலகட்டத்தில் தீபவம்சம் 1 மகா வம்சம்2 முதலான பாளி நூல்களில் இடம்பெற் றுள்ள கட்டுக்கதைகளும், ஐதீகங்களும் இலங்கை யின் உண்மையான வரலாறு என நம்பப்பட்டன. இப்பாளி இலக்கியங்கள் இலங்கையின் வரலாறு கி.மு.6-ஆம் நூற்றாண்டில் வடஇந்தியாவிலிருந்துவந்து குடியேறிய விஜயன் கூட்டத்தாரோடு ஆரம்பமாகின்றதெனவும் இக்காலத்திற்கு முன்னர் இலங்கையில் நாகரிகமுடைய மனதைப்பிறவி கள் வாழவில்லையெனவும் கூறுகின்றன. இவ்
வாறு குடியேறிய விஜயன் வழிவந்தோரே சிங் களமக்கள் எனவும் தமிழர்கள் இலங்கைக்கு அக்கரையிலிருந்து (தென்னிந்தியா) அவ்வப் போது படையெடுப்பாளராக, ஆக்கிரமிப்பாள ராக வந்து குடியேறிய சிறுபிரிவினர் எனவும் கூறுகின்றன. இக்கட்டுக்கதைகளை உண்மை வரலாறு என ஏற்றுக்கொண்ட பரணவிதானா போன்ற அறிஞர்கள் விஜயன் வருகை பற்றிய கதை வடஇந்தியாவிலிருந்து ஏற்பட்ட ஆரியர் குடியேற்றமெனவும். இவர்களே இலங்கையில் நாகரிகத்தை அறிமுகப்படுத்தினர் எனவும் விளக்கமளித்தனர்.இதற்குச் சார்பாக பரண விதான தமது தொல்லியல் மொழியியல் ஆய்வுகளைப் பயன்படுத்தினார்.
ஆனால் கடந்த இரு தசாப்தங்களாக இலங்கையில் வளர்ச்சியடைந்துள்ள தொல்லி யல் ஆய்வுகள் இலங்கையின் ஆதிகால வரலாறு தொடர்பாக நம்பகத் தன்மை வாய்ந்த புதிய முடிவுகளை முன்வைத்துள்ளன.
(1) இலங்கையின் வரலாறு விஜயன் வருகை யோடு ஆரம்பிக்கவில்லை. மாறாக இற்றைக்கு 28,000 வருடங்களுக்கு முற்பட்ட இடைக்கற்காலப் பண்பாட்டுடன் தொடங்குகிறது. இப்பண்பாட்டிற்கும் தமிழ்நாடு திருநெல்வேலிப் பண்பாட்டிற்குமிடையே பல்வேறு அம்சங்களில் ஒற்றுமைத்தன்மை காணப்படுகிறது. இதனால் இலங்கைக்கு இப்பண்பாட்டு மக்கள் தமிழ்நாட்டிலி ருந்தே புலம் பெயர்ந்திருக்க வேண்டும்.
(2) மகாவம்சம் கூறும் விஜயன் வருகை பற்றிய கதை வெறும் கட்டுக்கதை.8 அவ்வாறான குடியேற்றம் இலங்கையில் நடந்ததற்கு எதுவித தொல்லியற் சான்றுகளும் காணப் படவில்லை.
(3) இலங்கையில் நாகரிகத்தை வடஇந்தியா விலிருந்து குடியேறிய விஜயன் (கூட்டத் தார்) அறிமுகப்படுத்தவில்லை. மாறாக தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறிய வந்து விட மக்களே அறிமுகப்படுத்தினர். 10
(4) சிங்கள மக்களின் மூதாதையர் வடஇந்தியா விலிருந்து குடியேறிய ஆரியர்களின் (விஜய னின்) வழித்தோன்றல்கள் அல்லர். இவர் களும் தமிழ் மக்களைப் போல் தென்னிந் தியாவிலிருந்து குடியேறிய இடைக்கற் காலப், பெருங்கற்காலப் பண்பாட்டு மக்க ளின் வழிவந்தவர்களாவர். தென்னிந்தியா வில் பெருங்கற்காலப் பண்பாட்டின் பின் னணியில் தமிழ், தெலுங்கு, கன்னடம். மலையாளம் என்ற மொழிவழிப் பண் பாடுகள் தோன்றியது போல் இலங்கை யிலும் பெருங்கற்காலப் பண்பாட்டின் பின் னணியில் தமிழ், சிங்கள மொழிப்பண் பாடுகள் தோன்றின. 11
மேற்கூறப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் சிங்கள மக்களின் வரலாறு தொடர் பாக வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ள பாரம்பரியக் கருத்துக்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதைச்சுட்டிக்காட்டும் அதேவேளை தமிழர் தொடர்பாக வரலாற்று நூல்களில் மறைக்கப்பட்ட உண்மை வரலாறு தொல்லியற் சான்றுகளின் பின்னணியிற் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதையும் கோடிட்டுக்காட்டு கின்றன.
பாளி இலக்கியங்களின் செல்வாக்கிற்கு உட் பட்டு எழுந்த பிற்கால வரலாற்று நூல்களில் தமிழர் வரலாறு புறக்கணிக்கப் பட்டதைப் போல் அரச ஆதரவில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்விற்கூடத் தமிழர் பிராந்தியங் கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டே காணப் படுகின்றன. 1917இல் சுந்தரோடையில் ஆய் வினை மேற்கொண்ட பீரிஸ் தொல்லியல் ஆய் வில் தமிழர் பிராந்தியங்கள் புறக்கணிக்கப்படக் கூடாதெனச் சுட்டிக்காட்டினர். 12 ஆயினும் இதுவரையிற் கந்தரோடையில் மட்டும்தான்
2
ஒரு முழுமையான அகழ்வாய்வு 1976இல் நடத் தப்பட்டது. 13 இந்த ஆய்வின் மூலம் குடா நாட்டின் தொடக்ககால நாகரிக வரலாறு தென் னிந்தியாவை ஒத்த பெருங்கற்காலப் பண்பாட் டுடன் ஆரம்பமாகின்றதென்பது வெளிப்படுத் தப்பட்டது. 14 1980-இல் ஆனைக்கோட்டையி லும் அதைத்தொடர்ந்து களபூமி (காரைநகர்) வேலணை ஆகிய இடங்களிலும் நடாத்தப்பட்ட தொல்லியல் ஆய்வின் மூலம் செறிவான பெருங் கற்காலப் பண்பாட்டிற்குரிய திராவிடர் குடி யேற்றம் குடாநாட்டில் தெரியவந்துள்ளது.15 இருந்துள்ளதென்பது இப்பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய சான்றுகள் தமிழரின் பூர்வீக வரலாறு தமிழ்ப் பிராந்தியங்களில் இருந்து வெளிக்கிளம்ப வேண்டும் என்ற கருத்தை வலி யுறுத்துகின்றன.இக்கருத்தைப் பூநகரியிற் கிடைத்துள்ள சான்றுகள் மேலும் வலுவடையச் செய்துவிட்டன.
வரலாற்று ஆய்வில் பூநகரி
இலங்கையின் ஆதிகால, இடைக்கால வர லாறு தலைநகரங்களையும், அரசவம்சங்களை யும் மையமாக வைத்து ஆராயப்பட்டுள்ளது. இதனால் அரச தலைநசரங்கள் காலத்திற்குக் காலம் இடம்மாறும் பொழுது அத்தலைநகரங் கள் அமைந்த பிராந்தியங்களின் வரலாறு அக் காலகட்ட வரலாற்றில் முக்கியத்துவம் பெறு கிறது. இதனாற் பிற்காலத்தில் அரசதலைநகர் சுள் தோன்றிய பிராந்தியங்களுக்கெல்லாம் தொன்மையான பாரம்பரிய வரலாறு இருந்த தெனக் கூறமுடியாது. இதேவேளை ஆதிகால வரலாற்றில் தை தலைநகரங்களாக இருந்த பிராந் தியங்களுக்கு அதே வரலாற்றுப் பெருமை பிற் காலத்தில் இருந்ததெனவும் எடுத்துக்கொள்ள முடியாது. 13ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரை நல்லூரைத் தலைநகராகக் கொண்ட அரசொன்று யாழ்ப்பாணத்தில் இருந் துள்ளது. அக்காலத்தில் நல்லூருக்கு மிக அரு கில் அமைந்த பூநகரிப் பிராந்தியத்தின் பெரும் பகுதி யாழ்ப்பாண மன்னர்களின் நேரடி ஆகிக் கத்திற்கும், சில பகுதிகள் யாழ்ப்பாண மன்னர் களுக்குத் திறை செலுத்தும் வன்னிச்சிற்றரசர்
களின் ஆதிக்கத்தினுள்ளும் இருந்ததாகத் தெரி கின்றது, யாழ்ப்பாண அரசு தொடர்பாக எழுந்த இலக்கியங்களில் இப்பூநகரியும். பூநகரிப் பிராந்தியத்தினுள் இருந்த பொன்னாவெளி, பல்லவராயன்கட்டு ஆகிய இடங்களும் யாழ்ப் பாண அரசிற்கு வெளியேயுள்ள நாடுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.16 15ஆம் நூற்றாண்டில் எழுந்த கோகில சந்தேஸய என்ற சிங்களக் குயில்விடு தூதுப் பிரபந்தத்தில் 1450 இல் கோட் டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் படை யெடுத்த செம்பகப்பெருமாளின் (சப்புமால்குமா ரய) படைகள் வந்த பாதை வழியாகக் குயில் பறந்து சென்று யாழ்ப்பாணத்தை அடைந்த தாகக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பறந்து வந்த பாதைகளில் பூநகரியிலுள்ள கல்முனையும் அதையடுத்துள்ள யாழ்ப்பாணமும் கூறப்பட்டுள் ளன.17 மேலும் இந்நூலில் அக்காலத்தில் யாழ்ப்பாண அரசைப் பாதுகாத்துக்கொண் டிருந்த உப்புலவன் (விஷ்ணு) ஆலயத்தை இக் குயில் தரிசித்துச் சென்றதாகவும் கூறப்பட்டுள் ளது.18 இவ்வாலயம் பூநகரியின் தென்னெல் லையில் உள்ள வெள்ளாங்குளத்தில் அமைந் திருந்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறு தமிழ் சிங்கள இலக்கியங்களில் யாழ்ப்பாண அரசோடு தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ள பூநகரிப் பிராந்தியத்துக்குத் தொன்மையான வரலாற்றுப் பாரம்பரியம் இருந்ததென்பதை அண்மைக்கால மாக அங்கு கிடைத்துவரும் தொல்பொருட் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
இலங்கை வரலாறு தொடர்பாக எழுந்த முதல் பாளி இலக்கியங்களில் ஒன்றான மகா வம்சம் அனுராதபுரத்திற்கு வடக்கிலமைந்த பிரதேசத்தை நாகதீபம் (நாகதீப) எனவும்19 தமிழ் இலக்கியங்களில் ஒன்றான மணி மேகலை நாகநாடு எனவும் கூறுகிறது. 20 யாழ்ப் பாணத்தில் வல்லிபுரத்தில் கிடைத்த கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்குரிய பொற்சாசனமொன் றில் நாகதீபம்பற்றிய குறிப்பு வருகிறது. 21 இதை ஆதாரமாக வைத்து மகாவம்சத்திற் கூறப்பட்டுள்ள நாகதீபம் தற்போதைய யாழ்ப் பாணத்தைக் குறித்திருக்கலாம் எனக் கூறப்படு கிறது. ஆனால் பூநகரியிலுள்ள வரலாற்றுப் பழைமைவாய்ந்த நாகமுனை (தற்போது பாட நூல்களில் பேய்முனை எனப்படும் இடம்) நாக முனை ஆறு, நாகபடுவான், நாகதேவன் துறை
முதலான இடப்பெயர்களை நோக்கும்போது மகாவம்சம் கூறும் நாகதீபம் யாழ்ப்பாணம் பூநகரியுள்ளிட்ட பரந்த பிரதேசத்தைக் குறித் திருக்கலாம் எனக் கருத இடமளிக்கின்றது. இராசநாயகம் முதலியார் கி.பி. 2ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த கிரேக்க நாட்டவரான தொலமி தன் நூலிலே குறிப்பிட்டுள்ள புதுக்கி என்ற இடம் பூநகரியையும், தலைக்கோரி என்ற இடம் பூநகரியிலுள்ள கல்முனையையும் குறித்ததென் றார்.22 ஆனால் வரலாற்றாசிரியர்கள் பலரும் இவர் கருத்தை ஏற்றுக் கொண்டதாகத் தெரிய வில்லை.16ஆம் நூற்றாண்டிலே போர்த்துக் கேயரது வரலாற்றுடன் தொடர்புபடுத்தி இப் பூநகரி பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. 23 தமிழ் நாட்டிலும் பூநகரி என்னும் இடப் பெயர் இருப்பதனாலே24 16ஆம் நூற்றாண் டுக்கு முன்னரே தமிழ் நாட்டுத் தொடர்பால் இப்பெயர் இங்கு ஏற்பட்டதெனக் கூறலாம். இலங்கையின் புராதன வரலாற்று இலக்கியங் களான மகாவம்சத்திலும் சூளவம்சத்திலும் வட இலங்கையிலுள்ள முக்கிய இடங்களாக இட ஐம்பு கொலப்பட்டினம், வார்காவற்றுறை,மாந்தை, தம்பண்ணி போன்ற இடங்கள் குறிப்பிடப்பட் டுள்ளன. இப்பெயர்கள் இலங்கைக்கு அருகே அமைந்துள்ள தமிழ் நாட்டின் முக்கிய இடப் பெயர்களாக இருந்துள்ளன. அங்கிருந்தே ஆதி யில் ஏற்பட்ட மக்கள் குடிப்பெயர்வினாலும் வர்த்தகத் தொடர்பினாலும், இவ்விடங்களுக்கு இப்பெயர்கள் ஏற்பட்டன. அதுபோலவே பூநகரி என்னும் இடப்பெயரும் இங்கு ஆதியில் ஏற் பட்ட பெயராக அமைந்தது எனலாம். தெ
பாளி சிங்கள இலக்கியங்களில் சிறப்பித் துக் கூறப்பட்ட இலங்கையிலுள்ள சில இடங் கள் பிற்காலத்திலே தொல்லியலாய்வுக்கு உட் படுத்தப்பட்டபோது அங்கு கிடைத்த சான்று களும், அவ்விடங்கள் தொடர்பாக மக்களிடையே நிலவிய ஐதிகம், வரலாற்றுக் கதைகள் என்பன வும் பிற்காலத்தில் பிரதேசரீதியான வரலாற்று நூல்கள் எழுதப்படக் காரணமாயின இதற்கு யாழ்ப்பாணம், 25 மட்டக்களப்பு, 26திருகோண மலை27 போன்ற இடங்கள் தொடர்பாக எழு தப்பட்ட சில நூல்களைக் கூறலாம். பூநகரி யைப் பொறுத்தவரை அப்பிராந்தியம் தொடர் பாக ஒரு நூல் எழுதப்பட்டதாகத் தெரிய வில்லை. அவ்வாறு எழுதும் அளவிற்கு அப்பிர
தேசத்தின் வரலாற்று முக்கியத்துவம் உணரப் பட்டதாகவும் கூறமுடியாது. இருப்பினும் இலங்கை தொடர்பாகவும், குறிப்பிட்ட சில பிர தேசங்கள் தொடர்பாகவும் எழுந்த சில வர லாற்று நூல்களில் பூநகரிப் பிராந்தியம் பற்றிச் சுட்டிக் காட்டியுள்ளமை அவதானிக்கத்தக்கது. இவை பற்றி இவ்விடத்தில் நோக்குவது அவ சியமாகும்.
இலங்கை தொடர்பாகப் பிற்காலத்தில் எழு தப்பட்ட வரலாற்று நூல்களிலே 19ஆம் நூற்றாண் டின் பிற்பகுதியிலே பொறியியலாளராக இருந்த பாக்கர் என்பவர் எழுதிய புராதன இலங்கை (Ancient Ceylon) என்னும் நூல் சிறப்பாகக் குறிப் பிடத்தக்கது. 28 இந்நூலுக்கு முன்னோடியாக இவர் எழுதிய கட்டுரை ஒன்றில் மகாவம்சத் திலே குறிப்பிடப்படும் கி. மு. 2ஆம் நூற்றாண் டுக்குரிய பெலிவாலியைப் பூநகரியின் தென்னெல் லையில் அமைந்த பாலியாறு எனக்கூறி இங் கிருக்கும் வவுனிக்குளமே மகாவம்சத்திலே குறிப் பிடப்பட்டுள்ள பெலிவாலி என அடையாளம் காட்டினார். 29 மேலும் திராவிட மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்குக் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகளை ஆதாரம் காட்டி அனுராதபுரத் தில் 44 ஆண்டுகள் ஆட்சிசெய்த தமிழ் மன்னன் எல்லானன்பற்றி வரலாற்று மூலங்களிற் பெரு மளவு மறைக்கப்பட்டாலும் அவன் சாதனை களில் ஒன்றாகப் பெலிவாவி இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.30 இவரின் சமகாலத் தவரான லூயிஸ் இக்கருத்தை ஏற்ற துடன் தனது வன்னி பற்றிய நூலில் 15 ஆம் இயலில் இப்பிராந்தியங்களிலே கண்டுபிடிக்கப் பட்ட கல்வெட்டுக்கள், நாணயங்கள், கட்டிட அழிபாடுகள், இந்து விக்கிரகங்கள் என்பன பற் றியும் குறிப்பிட்டுள்ளார். 31 மேலும் இவர் இங் குள்ள இடப்பெயர்களை ஆராய்ந்து இலங்கை யின் ஏனைய இடங்களைவிடத் தூய தமிழில் உள்ள இடப்பெயர்கள் பல இங்கிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். 1924 - கொட் றிங்ரன் என்பவரால் வெளியிடப்பட்ட இலங் கையின் ஆதிகால நாணயங்கள் பற்றிய நூலிலே பூநகரியிலே கிடைத்த உரோமர்கால நாணயங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 32 இக்காலப் பகுதியிலே புராதன யாழ்ப்பாணம் (Ancien Jaffna) என்னும் நூலை எழுதிய இராசநாயகம்
முதலியார் தமிழ்ப்பிராந்தியங்களில் புராதன நகரங்களின் அழிபாடுகள் காணப்படும் இடங் களில் ஒன்றாகப் பூநகரியிலுள்ள அரசபுரத் தைக் குறிப்பிட்டுள்ளார். கி.மு. 3 ஆம் நூற் றாண்டிலிருந்து தமிழ்நாட்டிற்கும் அநுராதபுரத் திற்கும் இடையிலான வர்த்தக பண்பாட்டுத் தொடர்புகள் யாழ்ப்பாணம், பூநகரி ஊடாக நடந்ததென்பது இவர் கருத்தாகும்.33 1956இல் கணபதிப் பிள்ளையால் எழுதி வெளியிடப்பட்ட இலங்கைவாழ் தமிழர் வரலாறு என்னும் நூலிலே பூநகரியிலுள்ள வீரபாண்டியன் முனை என்ற இடப்பெயர் இரண்டாம் பாண்டியப் பேர ரசுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. 34 1970-ஆம் ஆண்டளவில் பூநகரி உதவி அர சாங்க அதிபராக இருந்த கிருஷ்ணமூர்த்தி இப் பிராந்தியத்திலிருந்து சில தொல்பொருட் சின் னங்களைச் சேகரித்ததுடன் அவை பற்றிய செய் திகளையும் பூர்வகலா என்ற சஞ்சிகையில் வெளியீட்டார். 34 இன்று யாழ்ப்பாண அரும் பொருளகத்தில் உள்ள தொல் பொருட் சின் னங்கள் சில அவராலே பூநகரியில் சேகரிக்கப் பட்டனவாகும்.1980-ஆம் ஆண்டளவில் சிற்றம் பலம் இங்குள்ள வெட்டுக்காடு. வினாசியோடை, கௌதாரிமுனை போன்ற இடங்களிலே தொல் லியல் மேலாய்வினை மேற்கொண்டு ஆதிகால், மத்தியகால நாணயங்கள் சிலவற்றைக் கண்டு பிடித்தார்.36 1981-இல் இரகுபதி மண்ணித் தலை, வெட்டுக்காடு ஆகிய இடங்களில் ஆய் வினை மேற்கொண்டு ஆதிக்குடியிருப்புகளுக்கு ரிய சில மட்பாண்ட ஓடுகளையும் ஒரு சில நாணயங்களையும் கண்டு பிடித்து அவை பற் றித் தமது நூலிலும் குறிப்பிட்டுள்ளார். 37
இவ்வாறு கடந்த ஒரு நூற்றாண்டு கால மாக வெளிவந்த வரலாற்று நூல்கள் சிலவற் றிலே பூநகரியின் பழமை பற்றி அவ்வப்போது சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாலும், இவை பூந கரியின் வரலாற்று முக்கியத்துவத்தையோ அல் லது இலங்கையின் வரலாற்றுப்போக்கில் இப் பிராந்தியம் ஏற்படுத்திய தாக்கத்தையோ ஓர ளவு தானும் நிறைவு செய்ததாகக் கொள்ள முடியாதிருக்கிறது. கடந்த காலங்களில் யாழ்ப் பாண அரசு, 38 யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், 39 தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலே பூநகரி கவனத்திலே கொள்ளப்படாத பிரதேசமாகவே இருந்துள்ளது. இந் நிலைலல் 1989 - 91 காலப்பகுதியில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வின் விளைவாக அரிய பல சான்றுகள் கண்டு பிடிக் கப்பட்டுள்ளன. தமிழ்ப் பிராந்தியங்களிலே கந்த ரோடைக்குப் பின்னர் ஈழத்தமிழர் வரலாற் றுக்கு வெளிச்சம் ஊட்டும் பல சான்றுகள் பூந கரியிலுள்ள பல இடங்களிலிருந்து கிடைத்துள் ளன. இச்சான்றுகள் சுற்காலந் தொட்டுத் தற் காலம் வரையான இப்பிராந்திய வரலாற்றை அறிய உதவுகின்றன,.40
தொல்லியல் ஆய்வின்
முக்கியத்துவம்
பூநகரியும் அண்மைக்காலத் தொல்பொருள் ஆய்வும் என்ற இந்நூல் பூநகரிப் பிராந்தியத் தொல்லியல் மேலாய்லினபோது எம்மாற் கண்டு பிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்களை (Archaeological remains) अ றாதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். அத்தொல்பொருட் சின்னங்கள் தொடர்பான புகைப்படங்கள் பல இந்நூலிற் பிரசுரிக்கப்பட் டுள்ளன. அத்தொல்பொருட் சின்னங்கள் இலங் கையில் தமிழ் மக்களுக்கு, தொன்மையான, தொடர்ச்சி குன்றாத பாரம்பரிய வரலாறு உண்டு என்பதை வெளிப்படுத்தி நிற்பதோடு, இலங்கை வரலாற்றில் பூநகரிப் பிராந்தியம் பெற்றிருந்த முக்கியத்துவத்தையும் புலப்படுத்தி நிற்கின்றன. பூநகரியிற் கண்டுபிடிக்கப்பட்டதை யொத்த பல தொல்பொருட் சின்னங்கள் அண் மைக் காலங்களில், தமிழ்ப் பிராந்தியத்தில் சிறப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 41 ஆயி னும் பூநகரியிற் கிடைத்த சில தொல்பொருட் சின்னங்கள் யாழ்ப்பாணத்திற் கிடைத்த தொல் பொருட் சின்னங்களைக் காட்டிலும் சில வகை யில் முக்கியத்துவம் வாய்ந்தவையென நாம் கருதுகிறோம்.
யாழ்ப்பாணத்தில் மனித நடமாட்டத்தின் தொடக்க காலம் பெருங்கற்காலப் பண்பாட்டு டன் (கி. மு. 1000இற்குப் பின்னர்) ஏற்பட்ட தற்கு இதுவரை சான்றுகள் கிடைத்துள்ளன 42 ஆனால், பூநகரியில் பெருங்கற்காலப் பண்பாட் டிற்கு முன்னரே இடைக்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்னை. தென்னிலங்கையிலும் மனித நட
மாட்டத்திற்கான உறுதியான ஆதாரங்கள் இடைக் கற்காலப் பண்பாட்டுடன் தொடங்கு வதை கோடிட்டுக் காட்டுவதனால் பூநகரி அப் பிராந்தியத்துடன் சமாந்தரமான வளர்ச்சி கொண்டிருந்ததென எடுத்துக் கொள்ள இட முண்டு. யாழ்ப்பாணத்தின் தொடக்க கால நாகரிகம் தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண் பாடாக இருப்பினும் அப்பண்பாட்டு வழிவந்த ஆதிகால மக்கள் பேசிய மொழியை அறிந்து கொள்வதற்கு அம்மக்கள் பயன்படுத்திய வரி வடிவ களோ சாசனங்களோ குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்குக் கிடைக்கவில்லை. ஆனால் பூநகரியில் பெருங்கற் காலப்பண்பாட்டு வழிவந்த மக்கள் பயன்படுத்திய பல வரிவடி வங்களும், உடைந்த நிலையில் உள்ள சில சாச னங்களும் கிடைத்துள்ளன. இவ்வரிவடிவங்கள் சமகாலத்தில் தமிழ்நாட்டில் வழங்கிய வரிவடி வங்கள் என மயங்கும் அளவிற்கு அதிக ஒற் றுமை கொண்டிருப்பதோடு, இரு சாசனங்கள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன என்பதை யும் உறுதிப்படுத்த முடிகிறது. 43 இதன் மூலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்தாவது தமிழ் மொழி பேசிய மக்கள் பூநகரியில் வாழ்ந்து வரு கின்றனர் எனக் கூறலாம். மேலும் பூநகரிப் பிராந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டு மையங் களில் இருந்து கிடைக்கப் பெற்ற மட்பாண்ட வடிவங்களும், மட்பாண்டங்களில் உள்ள சித்தி ரங்களும், ஓவியங்களும் அப்பிராந்தியத்தின் தனித்துவத்தை விரிவாக ஆராய வேண்டுமெனச் சுட்டி நிற்கின்றன.
கி.மு 5ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப் பட்ட நாணயங்கள் தொடக்கம் ஐரோப்பியர் காலம் வரையிலான பல்வேறு காலத்திற்குரிய பலதரப்பட்ட நாணயங்களும், பிறதொல்பொருட் சான்றுகளும் பூநகரிப் பிராந்தியத்தில் கிடைத் திருப்பது அப்பிராந்தியத்தின் நாகரிகத் தோற்ற காலத்தையும், நாகரிகச் சிறப்பையும் நிச்சயப் படுத்திக் கூற உதவுகின்றன. அத்துடன் அத் தொல்பொருட் சின்னங்கள் ஊடாக வரலாற் றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து பூநகரிப் பிராந் தியம் தென்னிந்தியா, கிரேக்கம், அரேபியா, சீனா ஆகிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு களையும், அதன் மூலம் கலாசாரப் பரிவர்த் தனையையும் ம் ஏற்படுத்திக்கொள்ளும் அளவிற்கு முதன்மை பெற்றிருந்தது என்பதையும் உறுதிப் களபடுத்த முடிகிறது. இவ்வாறான தொடர்ச்சி யான தொல்பொருட் சின்னங்கள் தமிழ்ப் பிராத் தியங்களில் சுந்தரோடையைத் தவிர ஏனைய இடங்களிற கிடைத்ததாகத் தெரியவில்லை.
சோழர் ஆட்சியிலேதான் முதன்முறையாக
முழு இலங்கையும் ஒரு மைய அரசின் கீழ்ச் சில ஆண்டுகளாவது ஆளப்பட்டதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன. சோழர் ஆட்சியோடுதான் இலங்கையில் இனம், மதம், மொழி பண்பாடு என்பனவற்றால் சிங்கள மக்களில் இருந்து வேறு பட்டு வாழ்ந்த தமிழ்மக்கள் மேலும் பலம் பெற்ற தாக வரலாற்று அறிஞர்கள் பலர் கருதுகின் றனர். ஆயினும் சோழர் ஆட்சி தொடர்பான தொல்பொருட் சின்னங்கள் தமிழ் தமிழ்ப் பிராந்தியங் களில் திருகோணமலையிற் கிடைத்ததைப் போல் ஏனைய இடங்களிற் கிடைத்ததாகத் தெரிய வில்லை. 13ஆம் நூற்றாண்டில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட சுதந்திரத் தமிழரசு ஒன்று யாழ்ப்பாணத்தில் உதயமாகியது. ஆயி னும் அவ்வரசின் தோற்றத்திற்குப் பின்னணி யாக இருந்த சோழர் ஆட்சிக்காலம் பற்றிய தொல்பொருட் சான்றுகள் இதுவரை அங்கு அதி கம் கிடைத்ததாகக் கூறமுடியாது. ஆனால் பூந கரிப் பிராந்தியத்தில் சோழக் குடியேற்றம், சோழர் ஆட்சி, சோழ நிர்வாகம், சோழர்காலப் பண்பாடு தொடர்பான பல தொல்பொருட் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 44 அச் சான்றுகளை ஆராய்வதாகவே இந்நூலின் 4ஆம் 5ஆம், அத்தியாயங்கள் விளங்குகின்றன.
ஆறாம் அத்தியாயத்திற் கூறப்பட்டுள்ள விட யங்கள் பூநகரியின் எல்லைப்பகுதியில் உள்ள புராதன கட்டிட அழிபாட்டுச் சின்னங்களை ஆராய்வனவாக அமைந்தாலும், அதனோடு தமி ழரசின் தோற்றமும் தொடர்புபடுத்தி ஆராயப் பட்டுள்ளது. இன்றைய வரலாற்று அறிஞர்கள் மத்தியில் தமிழரசின் தோற்றத்தை விஞ்ஞான பூர்வமாக ஆராயமுற்பட்டவர்களுள் எனது வர லாற்று ஆசான் இந்திரபாலா சிறப்பாகக் குறிப் பிடத்தக்கவர். 45 அவர் பாளி, சிங்கள, தமிழ் இலக்கியங்களை மட்டுமன்றி, தமிழ் அரசு பற்றி ஆய்வுசெய்த காலகட்டத்திற் கிடைத்த பல தொல்பொருட் சான்றுகளையும் தமது ஆய்வுக்கு முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், பிற்காலத்தில் புதிதாகத் தொல் பொருட் சான்றுகள் கிடைக்கப் பெற்றபோது அவர் தமது முன்னைய கருத்துக்களில் மாற்றங் கள் தேவையென்பதையும் சூசகமாகத் தெரிவிக்
6
சுத் தவறவில்லை. 46 ஆனால் எமது ஆய்வின் முடிவுகள் தமிழரசு தொடர்பாக அவர் முன் வைத்த அடிப்படைக் கருத்துக்களுடன் பெரு மளவுக்கு உடன்பாடாக அமையவில்லை, அவர் தமிழரசின் தோற்றத்திற்குக் கலிங்க வம்சத் தொடர்பே காரணம் எனச் சுட்டிக் காட்டி னார் 47 இதற்கு ஆதாரமாக, தமிழரசின் தலை நகர் சிங்கை என்று பெயர் பெறவும், அவ்வரசுக் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் நந்தி இடம் பெற்றமைக்கும், தமிழ் மன்னர்கள் கங்கை ஆரியர், கங்கைநாடார் என்ற விருதுப் பெயர் களைச் சூடியமைக்கும் கலிங்க வம்சத்தொடர்பே காரணம் எனக் கூறியுள்ளார். இக்கருத்தையே பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பலரும் ஏற்றுக் கொண்டனர்.48 ஆனால் இம்மூன்று அம்சங்களை யும் கலிங்க வம்சத்தோடு தொடர்புபடுத்துவதை விட சோழர் ஆட்சியோடு தொடர்புபடுத்து வது பெருமளவு பொருத்தம் என்ற கருத்தை நாம் முன்வைத்துள்ளோம் 49 இக்கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டு மென்பதையும் விரிவாக ஆராயக் கூடியன என் பதையும் அண்மையில் வெளிவந்த யாழ்ப்பாண இராச்சியம் எனும் நூல் சுட்டி நிற்கிறது. 50
ஏழாம் அத்தியாயத்திற் கூறப்பட்டுள்ள தொல்பொருட் சான்றுகள் பற்றிய விளக்கங்கள் 13ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர் ஆட்சிக் காலம்வரை பூநகரிப் பிராந்தியம் அதன் முக்கியத் துவத்தையும், தனித்துவத்தையும் தொடர்ந் தும் பாதுகாத்துக் கொண்டுள்ளதென்பதை வெளிப்படுத்துவனவாக உள்ளன.
பொதுப்பட இந்நூலில் இடம்பெற்றுள்ள தொல்பொருட் சின்னங்கள் பற்றிய ஆய்வு தமிழர் பிராத்தியத்தில், குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் (பூநகரி) வாழ்ந்த சமூகத்தின் தொடர்ச்சியான பண்பாட்டு வரலாற்று அசைவியக்கம் பற்றிக் கூறு வதாக அமைந்துள்ளது. அச்சமூகம் பற்றிய தொடர்ச்சியான தொல்லியற் சின்னங்கள் அச் சமூகம் சார்ந்த தமிழர் பிராந்தியத்தில், குறிப் பாசு யாழ்ப்பாணச் சமூகத்தில் நிரப்பப்படா துள்ள பண்பாட்டுத் தொடர்ச்சியை நிரப்புவதற் கும் உதவுகின்றன எனவும் எடுத்துக்கொள்ள இடமுண்டு.
(வாழ்நாள் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் பூநகரி தொல்பொருள் ஆய்வு நூலிலிருந்து)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.