தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகமானது கடந்த 7 ஆம் திகதி சீல் செய்யப்பட்டது.
பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் 2024.01.05 தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது (2024.02.16) விசாரணை இடம்பெற்றதை தொடர்ந்து சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையில் கரப்பான்பூச்சி மற்றும் புழுக்களுடன் உணவகத்தை நடாத்தியமை உட்பட 12 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உரிமையாளரிற்கு 36000 தண்டப்பணம் அறவிடப்பட்டது.
மேற்குறித்த வழக்கானது 22.02.2024 அன்று மன்றிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகரால் மூடுவதற்கான கட்டளையை பெறுவதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டிருந்ததுடன் வழக்கானது கட்டளைக்காக 2024.03.07 இற்கு திகதியிடப்பட்டது.
இன்றைய தினம் குறித்த உணவகத்தின் திருத்த வேலைகள் முடிவடைந்து வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர் உறுதுப்படுத்தும் வரை சீல் வைத்து மூடுமாறு மன்றானது கட்டளை பிறப்பித்தமையை தொடர்ந்து கடை சீல் வைத்து மூடப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.