நாற்பது மணி நேரம் தொடர்ச்சியாக கர்நாடக இசைபாடி (Forty hours longest Carnatic singing marathon) புதிய உலக சாதனை படைத்துள்ளார் கர்நாடக இசைமேதை திரு.ஆரூரன் அருநந்தி அவர்கள்.
நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை மாலை (08.06.18) கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் ஆரம்பமான இந்த நிகழ்வு இன்று காலை 10:19 மணியளவில் மண்டபம் நிறைந்திருந்த மக்களின் பலத்த கரகோசத்தின் மத்தியில் நிறைவு பெற்றது.
முன்னைய சாதனையாக இந்தியாவின் பெங்களூரில் நிகழ்த்தப்பட்ட 24 மணி நேர சாதனை இதுவரை விளங்கி வந்தது.
திரு.ஆரூரன் அருநந்தி அவர்கள் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். இவர் கர்நாடக இசையை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கற்றிருந்தார்.
சாதனை நிகழ்வின் இறுதி 5 நிமிட காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.