இலங்கையின் அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு 2026 ஏப்ரல் மாதத்திற்காக ஒருவருக்கு மாதம் ரூ.17,117 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) தெரிவித்துள்ளது.
மாவட்ட அடிப்படையில், அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான செலவு அதிகமாக பதிவானது கொழும்பு மாவட்டத்தில் ஆகும். கொழும்பு மாவட்டத்தில் ஒருவருக்கு மாதம் ரூபா 18,461 தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மொனராகலை மாவட்டத்தில் குறைந்தபட்சமாக ரூபா 16,367 தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த வறுமைக் கோடு மாதாந்தம் புதுப்பிக்கப்படுகிறது.
இது 2012/13 குடும்ப வருமான மற்றும் செலவினக் கணக்கெடுப்பை (House hold income and expenditure survey) அடிப்படையாகக் கொண்டு, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (National consumer price index - NCPI) அடிப்படையில் திருத்தப்பட்டு கணக்கிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.