மனநல மட்டத்தில் (MHQ) 2வது மிக உயர்ந்த தரவரிசையில் இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
Sapien Labs இன் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மன நிலை அறிக்கையின்படி (annual Mental State of the World Report), உலகின் மிகக் குறைவான துன்பகரமான நாடுகளில் இலங்கையும் உள்ளது. 89 மதிப்பெண்களுடன் மனநல மட்டத்தில் (MHQ) இலங்கை உலகின் 2 வது மிக உயர்ந்த தரவரிசையில் உள்ளது.
டொமினிகன் குடியரசு பட்டியலில் முன்னணியில் உள்ளது, இலங்கை 2 ஆவது இடத்திலும், தன்சானியா, பனாமா மற்றும் மலேசியா ஆகியவை முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளன.
இலங்கையின் சனத்தொகையில் 14% பேர் மட்டுமே உலகளவில் மிகக் குறைவான மன உளைச்சலுக்கு ஆளாவதாக அல்லது போராடுவதாக தெரிவிக்படுகின்றது .
அறிக்கையின்படி, இது பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டது, அங்கு 35% வரை மனநல சவால்களை எதிர்கொள்கின்றனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.