சந்நிதியான் ஆச்சிரமத்தால் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2023 (வெள்ளிக்கிழமை)
சந்நிதியான் ஆச்சிரமத்தால் வல்வெட்டித்துறை - பிரதேச வைத்தியசாலைக்கு 756000.00 ரூபா பெறுமதியான மருந்து வகைகள் வழங்கப்பட்டன.
மருத்துவப் பொருள்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு 756000.00 ரூபா பெறுமதியான மருந்து வகைகள் வைத்திய அத்தியட்சகரிடம் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார். இவ் உதவித் திட்டத்தில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் பல உதவிகளாக விபத்தில் காயமடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட அச்செழு, நீர்வேலியை சேர்ந்த க. மதுசன் என்பவருக்கு சிகிச்சைக்காக 100000. 00 ரூபா நிதியும்
யா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய முன்னாள் முதல்வரின் பாராட்டு விழாவுக்காக 25000 ரூபா நிதியும், அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் வைரவிழாவை முன்னிட்டு பரிசளிப்பு நிகழ்வுக்காக 30000 ரூபா நிதியும் ஆச்சிரமத்தில் வைத்து வழங்கப்பட்டன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.