செல்வச்சந்நிதி தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/09/2022 (வெள்ளிக்கிழமை)
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவதின் பிரதான திருவிழாவான தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது.
காலை 7 மணிக்கு ஆரம்பமான பூசைகளைத் தொடர்ந்து தேர் வீதியுலா காலை 10 மணியளவில் இடம்பெற்றது. கடந்த 2 வருடங்கள் கோவிட் தொற்றுக் காரணமாக வருடாந்த மகோற்சவம் சிறப்பாக இடம்பெறவில்லை.
இன்றைய தேர்த் திருவிழாவில் வழமையை விட பக்தர்கள் வருகை அதிகம் எனக் கூறப் படுகின்றது.
கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா நாளை காலையும், மாலை மெளனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.