நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உ/த) பரீட்சையில், வல்வை சிதம்பரக் கல்லூரி மாணவி செல்வி ரகு சிறீதேவி கணிதப்பிரிவில் 3A சித்தி பெற்றமைக்காக பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்றது.
கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் திரு வேல்விநாயகம் பரமேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி வரலாற்றில் கணித விஞ்ஞானப் பிரிவில் முதல்முறை 3A சித்தி பெற்று கல்லூரிக்குப் பெருமையைத் தேடித்தந்தமைக்காக ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய மாணவியை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி வலய கணித பாடத்திற்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு ரி. சுஜிகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அதிபர், ஆசிரியர்கள், ஊழியர்கள் நலன்புரிச் சங்கத்தினர்; பழைய மாணவர்சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள். நலன் விரும்பிகள் உட்பட கல்லூரிச் சமூகத்தினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
S. Rajendra (master) (UK)
Posted Date: May 04, 2025 at 21:52
Heartfelt Congratulations to Ms. Ragu Sridevi!
Your success in the A Level exams is a testament to your dedication and hard work. You’ve made everyone proud. Keep striving forward with the same focus and passion—may your journey through graduation be just as brilliant and free from distraction. Wishing you continued success and happiness ahead!
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.