திரு.இ.ஞானசுந்தரம் (கட்டியண்ணா) அவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயம், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் உட்பட வல்வையைச் சூழவுள்ள அனைத்து ஆலயங்களிலும் பிள்ளையார் கதை, கந்தபுரான படிப்பு மற்றும் திருவாசகம் ஆகியவற்றிற்கு உரையாளனாகவும், ஆன்மீக சொற்பொழிவாளனாகவும் திகழ்ந்துவந்தார்.
கட்டி அண்ணா அவர்கள் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவை கடந்த 28.10.2016 அன்று நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா - 2016 இல் ஆன்மீகத்திற்கான கலைப்பரிதி விருதினை பெற்றமைக்காக வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரால் இன்று திருவாதிரை நன்னாளில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
திரு.இ.ஞானசுந்தரம் அவர்கள் கடந்த 20.11.2011 அன்று நடைபெற்ற கணபதி படிப்பகத்தின் 44 ஆவது ஆண்டுவிழாவிலும் அவரது ஆன்மீகப்பணிக்காக கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் 1968 ஆம் ஆண்டு கணபதி படிப்பகத்தின் செயலாளராக பதவியேற்று சிறந்த சேவையை ஆற்றியதுடன், கணபதி மின் அமைப்பின் பாரிய வளர்சிக்கும் வித்திட்டதுடன் நெடியகாட்டு பிரதேசத்தின் அனைத்து நிர்வாகங்களிற்கும் உறுதுணையாக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (Nediyakadu web)