எனது இந்த வளர்ச்சிக்கு வல்வெட்டித்துறை மாலுமிகளின் பங்கே பிரதான காரணம் என வல்வையில் பிறந்தவரும் தற்பொழுது சிங்கப்பூரில் வசிப்பவருமான பிரபல முன்னாள் கப்பற் தொழிலதிபர் திரு.தாமோதரம்பிள்ளை மணிவாசகர் அவர்கள் இன்று 15 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் நடைபெற்ற கெளரவிக்கும் வைபவத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.
வல்வை மாலுமிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வல்வை மாலுமிகள் சங்க இணைத் தலைவர் திரு.R.இராஜேந்திரா தலைமையில் வல்வை சந்தியில் அமைந்துள்ள நகரசபைக் கட்டத்தின் மேல் மாடியில் இந்த நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக திரு.மணிவாசகர் மற்றும் திருமதி மணிவாசகர் ஆகியோர் மலர் மாலை அணிவித்து வல்வைச் சந்தியிலிருந்து விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
மங்கள விளக்கேற்றல் மற்றும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பிரதமகுரு தண்டாயுதபாணிக தேசிகரின் ஆசியுரையுடன் விழா ஆரம்பமாகியது.
விழாவில் வடமாகாணசபை உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம், வல்வை கப்பற்துறை அதிகாரிகள், வல்வை மாலுமிகள் சங்க உறுப்பினர்கள் திரு.மணிவாசகரின் சேவை குறித்து பாராட்டி பேசியிருந்தார்கள்.
விழாவில் பேசிய மணிவாசகர்
விழாவின் இறுதியில் பேசிய திரு.மணிவாசகர் அவர்கள் தனது கடந்த கால கப்பற்துறை வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டதுடன், தனது இந்த உயர் வளர்ச்சியில் வல்வை மாலுமிகளின் பங்கு பிரதானம் எனச் சுட்டிக் கட்டியிருந்தார். அதிலும் குறிப்பாக வல்வையைச் சேர்ந்த தற்பொழுது லண்டனில் வசிக்கும் கப்டன்.கார்த்திகேசு பங்கு குறித்தும் பிரஸ்தாபித்திருந்தார்.
குறித்த இந்த நிகழ்வில் சிங்கப்பூரில் வசிக்கும் மணிவாசகரின் இரண்டு மகள்களும் தம் குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.