முருகப்பெருமானுக்கு முதன்மையான விரதமான கந்தசஷ்டிவிரதம் இன்று ஆரம்பமாகின்றது. தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் இரண்டாவது வருட மகோற்சவம் என வர்ணிக்கப்படும் அளவிற்கு கந்தசஷ்டிவிரதம் செல்வச் சந்நிதியில் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்றிலிருந்து 5 நாட்கள் இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி சூரன்போரும் அதனைத் தொடர்ந்து பாரணை நிகழ்வும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கந்தசஷ்டிவிரதம்
சஷ்டிவிரதமானது ஐப்பசிமாத தீபாவளி அமாவாசையின் பின், அதாவது வளர்பிறையின் பிரதமை அன்று ஆரம்பித்து, ஆறாம் அல்லது ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்கள் அனுட்டிக்கப்படும். இலங்கையில் இவ்விரதம் இந்த முறை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி ஐந்தாவது தினமான 08.11.2013 வெள்ளிக்கிழமை அன்று, சூரசங்கார நிகழ்வு வரை நடைபெறவுள்ளது.
சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் தலையாய விரதங்களுள் கந்தசஷ்டி விரதமும் முதன்மையான ஒன்றாகும். முருகப் பெருமானுக்குரிய விரதங்கள் மூன்று. அவை வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாகும். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து, அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.
வளர்பிறையில் பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.