சிவசேனாக் கட்சியின் தலைவர் பால் தாக்ரேயின் ஆஸ்தி இராமேஸ்வரத்தில் கரைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2012 (சனிக்கிழமை)
கடந்த 17 ஆம் திகதி மரணமடைந்த சிவசேனாக் கட்சியின் தலைவர் பால் தாக்ரேயின் ஆஸ்தி இன்று இராமேஸ்வரத்தில் கரைக்கப்படவுள்ளதாக இந்தியப் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று ராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகராச்திராவின் முடிசூடாமன்னன் என்று சொல்லப்பட்டுவந்த 86 வயதுடைய திரு.பால் தாக்ரே கடுமையான ஒரு இந்துத்துவவாதியாவார்.
ஒரு கார்டூனிஸ்ட் ஆக தனது வாழ்க்கையை The Free Press Journal எனும் ஆங்கிலப் பத்திரிகையில் மும்பையில் ஆரம்பித்த திரு.பால் தாக்ரே, 1960 களில் 'மார்மிக்' எனும் தனது சொந்த வாராந்த இதழை ஆரம்பித்து பின்னர் 'சாம்னா' எனும் தினசரிப்பத்திரிகையை நடாத்தி வந்தார்.
19 ஜூன் 1966 இல் 'சிவ சேனை' எனும் கட்சியை ஆரம்பித்திருந்த திரு.பால் தாக்ரே, கடந்த 14 ஆம் திகதி வரை அதன் தலைவராக இருந்தவர் என்பது குறிபிடத்தக்கது.
கடந்த 17 ஆம் திகதி மரணமடைந்த சிவசேனாக் கட்சியின் தலைவர் பால் தாக்ரேயின் பூதவுடல் கடந்த 18 ஆம் திகதி மும்பையில், இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் உரிய மரியாதைகளுடன் தகனம் செய்யப்படிருந்தமை குறிபிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.