வல்வெட்டித்துறை அளக்கடவை ஒழுங்கையில் அமைந்துள்ள வல்வை பொது விளையாட்டரங்கிற்கு இன்று மாலை பல வெளிநாட்டவர்கள் வருகை தந்திருந்தனர்.
அமெரிக்காவின் Davidson University, Carolina யை சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் வல்வை பொது விளையாட்டரங்கை பார்வையிட்டதுடன் சில நிமிடங்கள் பரீட்சாத்தமாக உதைப்பந்தாட்ட பயிற்சியையும் மேற்கொண்டிருந்தனர்.
இவர்களுக்குரிய விளக்கங்களை இப் பொது விளையாட்டரங்கின் நிறுவனர் பேராசிரியர் சபா.இராஜேந்திரன் அவர்கள் அளித்திருந்தார்.
வல்வை பொது விளையாட்டரங்கானது (Indoor Futsal ground) இவ்வகையில் இலங்கையில் அமையப் பெற்றுள்ள முதலாவது விளையாட்டரங்கு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.