அரச பதவிகளுக்கான வெற்றிடங்கள் - 2013.11.29 - VEDA வின் அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2013 (வெள்ளிக்கிழமை)
VEDA நிர்வாகிகள் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) வலம்புரி மற்றும் தினகரன் நாளிதழ்களில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு
அரச பதவிகளுக்கான வெற்றிடங்கள் (29.11.2013)
2013.11.25 அன்று வெளி வந்த வலம்புரி நாளிதழ்
01)நிர்மானத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சு அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களம்
அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தில் இயந்திர அத்தியட்சகர்தரம்- 2 தொகுதி (அ) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கல்வித்தகைமை :-
தூய கணிதம் அல்லது பிரயோக கணிதம் அல்லது இணைந்த கணிதம் மற்றும் பௌதீகவியல் என்பன உட்பட 3 விஞ்ஞானதுறை பாடங்களில் க.பொ.த (உ.த) பரீட்சையில் ஒரே தடவையில் சித்தி அடைந்திருக்க வேண்டும். மற்றும் மொழி மற்றும் இலக்கியம், கணிதம், விஞ்ஞானம், மற்றும் மேலும் ஒரு பாடத்திற்கு திறமைச் சித்தியுடன் 06 பாடங்களில் க.பொ.த (சா.த) பரீட்சையில் 2 தடவைக்கு மேற்படாதவாறு சித்தி அடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பமுடிவுத்திகதி- 2013.12.06
சம்பளம் :- பொது நிருவாக சுற்றறிக்கை இலக்கம்6/2006 (iv) இன் MN3- 2006 Aயின் கீழ் ரூபா 15000 – 180X4 – 240X6 – 320X11 – 360X20-27885
02)வடமாகாண பனை மற்றும் தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு நிருவனங்களின் பேரினைவயம்.
தட்டெழுத்தாளர்.
மேற்படி பணிநிலைக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரியிடம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கல்வித்தகைமை :-
கூட்டுறவு ஊழியர் சாதாரண தரப் பத்திரம் அல்லது க.பொ.த (சா.த) தரத்துடன் தே.க.பொதரம் சம்மந்தப்பட்ட மொழியுடன் 06 பாட சித்தியுடன் தமிழ் தட்டெழுத்தில் நிமிடத்திற்கு 20 சொற்கள், ஆங்கில தட்டெழுத்தில் நிமிடத்திற்கு 30 சொற்கள் , என்ற வேகத்தில் இருக்க வேண்டும். அத்துடன் கூட்டுறவு ஊழியர் 15வது சம்பளத் திட்டத்தில் தமிழ் அல்லது ஆங்கில தட்டெழுத்தாளர் பதவியில் குறைந்தது 2 வருட அனுபவம் இருத்தல் வேண்டும்.
01 .கூட்டுறவுப் பணியாளர் (சாதாரண தரம்) அல்லது க.பொ.த (சா.த) தரத்தில் கணிதம் அல்லது வர்த்தகம் அல்லது எண்கணிதம் மற்றும் தமிழ் அல்லது சிங்கள மொழி உட்பட 06 பாடங்களில் 2 தடவைக்கு மேற்படாத அமர்வில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.
02.கூட்டுறவுப் பணியாளர் 15 வது சம்பளத் திட்ட துறைப் பதவியொன்றில் 02 வருடஅனுபவம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.