நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுபோட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 04/12/2013 (புதன்கிழமை)
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுபோட்டியில், தெரிவு செய்யப்பட்ட சிறந்த முன்னணி கழகங்கள் மோதும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது, தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறவுள்ளது.
வடமாரட்சி அணி சார்பாக தலை சிறந்த 12 அணிகள் மோதவுள்ளன. இதில் சார்பாக வல்வை, டயமன்ஸ், பொமேர்ஸ், விண்மீன், நவஜீவன்ஸ், சென்அன்ரனீஸ், கலைமதி, கொலின்ஸ், சென்சேவியர், யங்கம்பன்ஸ், இமையாணன், உடுப்பிட்டியூத் ஆகிய அணிகள் மைலோ கிண்ணத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இச்சுற்று போட்டியானது எதிர்வரும் 05, 06, 07 ஆகிய தினங்களில் இமையாணன் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண அணி சார்பாகவும் தலை சிறந்த 12 அணிகள் மோதவுள்ளன. இச்சுற்று போட்டியானது எதிர்வரும் 09, 10, 11 ஆகிய தினங்களில் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் பத்திரிகையாளர் மாநாடு, நேற்று இரவு யாழ் நகரில் அமைந்துள்ள கிறீன்கிறாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது அறிமுகம் செய்யப்பட்ட வெற்றி கிண்ணம் 24 அணியின் வீரர்களிடம் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியால் ஒப்படைக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.