நிலுவையிலிருந்த வல்வை நெற்கொழு மைதானப் பிரதேசத்தை கையகப்படுத்த நீதிமன்றம் அனுமதி - விளையாட்டு அரங்கு அமைக்க முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2012 (திங்கட்கிழமை)
இதுவரை நீதிமன்றில் நிலுவையிலிருந்து வந்த, வல்வை நெற்கொழு மைதானப் பிரதேசத்தை கையகப்படுத்த பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட வல்வை நெற்கொழு மைதானம், 1999 ஆம் ஆண்டிற்கு முற்ப்பட்ட காலப் பகுதி வரை வல்வை நகரசபைப் பிரேதேச மக்களின் பாவனையில் இருந்து வந்தது. 1999 இல் வல்வெட்டித்துறை நகரசபையின் அபிவிருத்திப் பணிகளில் ஒன்றாக, நெற்கொழு மைதானத்தின் விரிவாக்கப் பணிகள், அப்போதைய நகரசபைத் தவிசாளர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் இத் திட்டத்திற்கு எதிராக தனி நபர் ஒருவரினால், 2000 ஆம் ஆண்டில் தொடரப் பட்ட வழக்கினைத் தொடர்ந்து, நிலுவையிலுருந்து வந்த மைதான விவகாரம் தற்போது பருத்தித்துறை நீதிமன்றினால் வல்வை நகரசபைக்கு சார்பாக, மைதானப் பிரதேசத்தை (15 ஏக்கர்கள், 240 பரப்புக்கள்) கையகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கீழே உள்ள படம் கையகப்படுத்தபடவுள்ள காணிகளைக் காட்டுகின்றது
சிறப்புக் குழு
இதற்கமைய கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற வல்வை நகரசபைக் கூட்டத்தில் நெற்கொழு மைதானம் சம்பந்தமாக ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் மைதான விடயங்களை முன்னெடுப்பதற்காக ஒரு சிறப்புக் குழுவை அமைப்பது என்றும் அதின் தலைவராக வல்வை நகரசபை உறுப்பினர் அல்லாத ஒருவரையும் மேலும் 15 நபர்களை (இதில் ஐவர் நகரசபை உறுப்பினர்கள்) உறுப்பினர் களாகவும் நியமிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இக்குழுவினால் சேகரிக்கப்படும் நிதியைக் கையாள்வதற்காக வல்வை நகரசபையின் கீழ் ஒரு சிறப்பு வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிபதற்க்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் 4 கோடி தேவை
கீழே காட்டப்பட்டுள்ள விலை மதிப்புத் திணைக்களத்தின் நகலின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட காணிகளை கையகப் படுத்த சுமார் 4 கோடி தேவை என மதிப்பிடப் பட்டுள்ளது.
கீழே உள்ள படம் கையகப்படுத்தபடவுள்ள காணிகளின் தற்போதைய விலைகளைக் காட்டுகின்றது
2 கோடிரூபா வசதிகள் கை நழுவியது
வல்வெட்டித்துறைக்கு சுனாமித் திட்டத்தில் சுமார் 2 கோடி ரூபா, விளையாடரங்கு அமைப்பதற்கு வழங்கப் படவிருந்த போதும் , இடப் பிரச்சனையால் இது கைகூடவில்லையென்பது இங்கு குறிபிடத்தக்கது.
நெற்கொழு மைதானம் பற்றிய ஒரு சிறு ஆய்வு
கையகப்படுத்தப்படவுள்ள மைதானத்திற்குரிய காணியின் கணிசமான பகுதி வல்வெட்டித்துறை சிவன் கோவிலிற்கு சொந்தமானதாக உள்ளதாக அறியப் படுகின்றது. இதற்கு ஆதாரமாக 1864 இல் இருந்தான உறுதிகள் இருந்ததாகவும், இக் காணிகள் 1950 களில் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் வல்வை விளையாடுக் கழக இளையர்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்றது.
தற்போதும் காணியின் பெரும் பகுதிகள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் அவரின் பாரியார் திருமதி.வேலுப்பிள்ளை பார்வதி பிள்ளை அவர்களின் பெயர்களிலேயே உள்ளதாக அறியப்படுகின்றது. மீதிக் காணிகள் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் திரு.ஞானமூர்த்தி, திரு.தேவசிகாமணி, Dr.சரவணமுத்து மற்றும் சிலரின் பெயர்களில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
1993 இன் பிற்பகுதியில் நெற்கொழு மைதானத்தின் விரிவாக்கத்திற்கும், உருவாக்காத்திற்குமான ஆரம்ப வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் இது கைகூடவில்லை.
பின்னர் 1999 இல் அப்போதைய நகரசபைத் தவிசாளர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட மைதான விரிவாக்கம், 2000 களில் தனி நபரினால் தொடுக்கப்பட்ட வழக்கினைத் தொடர்ந்து தடைப்பட்டிருந்த்தது. இதற்கு எதிராக நகரசபை சார்பில் வழக்காடப் பட்டதன் காரணமாக, இதுவரை நிலுவையிலிருந்த மைதானப் பிரதேசத்தை கையகப்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2011 இல் வல்வை ஒன்றியத்தினால் 'வல்வை நெற்கொழு பொது விளையாட்டரங்கு நிதிக்கென' 5 லட்சம் ரூபாக்கள் வழங்கப்பட்டிருந்தது. இது நீதிமன்றில் வழக்காடுவதற்க்கான சாத்தியங்களையும் அதிகரித்திருந்தது
யாழ்ப்பாணம் அரியாலையில் A9 நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள உதைபந்தாட்ட விளையாட்டரங்கு, இந்த மாதக் கடைசியில் FIFA வின் (Fedaration International of Football Association ), தலைவர் 'Sepp Blatter' அவர்களால் திறக்கப்படவுள்ளது.
சுமார் USD 400,000. (5 கோடி இலங்கை நாணயம்) செலவில் அமைக்கப்பட்டுள்ள இவ் விளையாட்டரங்கு ஆனது, யேர்மனிய அரசு மற்றும் FIFA ஆகியவற்றினால் நிதி உதவி அளிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.
இவ் விளையாட்டரங்கானது, மைதானத்தை விட, ரசிகர்கள் மற்றும் விளையாட்டுவீரர்கள் அமரக் கூடிய வசதிகளையும் (Pavilion), பயிற்சி நிலையம், கேட்போர் கூடம் மற்றும் அறைகளைக் கொண்டவையாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.