வெடுக்குநாறி மலையில் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஷ்டை !
பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2023 (சனிக்கிழமை)
வவுனியா வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் இன்று மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வவுனியா நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதகுருமார்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்களின் பங்கேற்புடன் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.