அமரர் சோதிலிங்கம் முத்துலெட்சுமி நினைவான கருணைஊற்று அறக்கட்டளை அமைப்பு 16.07.2023 அன்று பரந்தன் சிவபுரகிராமத்தில் இருக்கும் பத்துவயதுக்கு உட்பட்ட 25 மாணவமாணவிகளுக்கு மக்கள் வங்கியில் வங்கிக்கணக்கு ஒவ்வொருவருக்கும் ஆரம்பித்து அதே தினத்தில் இலங்iகை ரூ 5000 வைப்பில் இடும் நிகழ்வு நடைபெற்றது.
பரந்தன் மக்கள் வங்கி முகாமையாளர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவமாணவிகளும் பெற்றோரும் கலங்துகொண்டனர்.
கடந்த இரண்டுவருடங்களாக அதே பரந்தன் சிவபுரகிராமத்தில் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்சிறுமியரின் கல்வி மேம்பாட்டுக்காக மாலைநேர வகுப்புகளும் இரவுஉணவும் கருணை ஊற்று அறக்கட்டளையால் வாரத்துக்கு ஐந்துநாட்கள் தகுதிவாய்ந்த ஆசிரியைகள் மூலம் நடாத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
இப்போது 16யூலை 2023 அன்று ஒரு புதிய திட்டமாக ஒவ்வொரு மாணவமாணவியருக்கும் வங்கிக்கணக்கு ஆரம்பித்து முதற்கட்டமாக ரூ 5000 வைப்பிலிடப்பட்டது.
இனி மாதாமாதம் ரூ 1000 அவர்களின் வங்கி கணக்கில் இடப்படும். இந்த பணம் அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகும்போது கல்வி தேவைக்காகவோ அல்லது ஏதேனும் தொழில் முயற்சிக்காகவோ அ ந்த மாணவமாணவியர் எடுத்து கொள்ள முடியும்.
அதற்கு முன்பாக வேறு எவரும் அந்த பணம் எடுத்து கொள்ள முடியாது என்ற நிபந்தனைகளுடனேயே பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
கருணை ஊற்று அறக்கட்டளை அமைப்பு ஆரோக்கியமான அறிவார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்கும் பயணத்தில்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.