அரச பதவிகளுக்கான வெற்றிடங்கள் - 2014.01.01 - VEDA வின் அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2014 (வெள்ளிக்கிழமை)
VEDA நிர்வாகிகள் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) தினகரன் மற்றும் உதயன் நாளிதழ்களில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-
அரச பதவிகளுக்கான பதவி வெற்றிடங்கள் (01.01.2014)
2013.12.30அன்று வெளி வந்த உதயன்
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவுச்சபை ( பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.)
01) கணணி தட்டெழுத்தாளர்
கல்வித்தகைமை:-
கூட்டுறவு ஊழியர் 17வது சம்பளத்திட்டத்தில் கணனி தட்டெழுத்து (பக்க வடிவமைப்பு) பதவியில் 3 வருட அனுபவம். அல்லது கூட்டுறவு ஊழியர் சாதாரண/ க.பொத. (சா.த) தில் கணிதம்/ எண்கணிதம் ,தமிழ்/ சிங்களம் உட்பட 06 பாடசித்தியுடன் அச்சகத்தில் கணணி தட்டெதழுத்தாளர் பதவியில் 1 வருட அனுபவம்.
சம்பளம் :- 9200- 70x10 - 10650
02) கல்வி விரிவாக்கல் அலுவலர் தரம் 201/5
கல்வித்தகைமை :-
கூட்டுறவு ஊழியர் 6வது சம்பளத்திட்ட பதவியில் ஆகக்குறைந்தது 3 வருட அனுபவம் இருத்தல் வேண்டும். அல்லது கூட்டுறவு ஊழியர் 7 வது சம்பளத்திட்டத்தில் ஆகக்குறைந்தது 6 வருட அனுபவம் இருத்தல் வேண்டும்./ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் ஒன்றுடன்/ அதற்கு சமனான தகைமை ஒன்றுடன் .அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஒன்றில் கற்பித்தல் துறையில் 10 ஆண்டு அனுபவம்.அல்லது கூட்டுறவு ஊழியர் உயர்தர தராதரப்பத்திரம்/ க.பொ.த (உ.த) பரீட்சையில் 3 பாடங்களுடனான சித்தியுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஒன்றில் கற்பித்தல் துறையில் 12 ஆண்டு அனுபவம்.(கணணி தொழிநுட்பத்தை பயன்படுத்தி விரிவுரைகள், பயிற்சிகள் நடத்தக் கூடியவராக இருத்தல் வேண்டும்.)
சம்பளம் :- 12450-190x10-210 x 10 – 16450
03) பத்திரிகை ஆசிரியர்( ஐக்கியதீபம் )
கல்வித்தகைமை :-
பத்திரிகைத்துறையில் அனுபவம் இருத்தல் வேண்டும் கூட்டுறவு துறையில் அனுபவம் உள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்ப முடிவுத்திகதி:- 18.01.2014
===========================================
2013.12.30அன்று வெளி வந்த உதயன்
பொருளாதாரஅபிவிருத்தி அமைச்சு கமநல அபிவிருத்தி திணைக்களம்
01) தொழில்நுட்ப உத்தியோகத்தர்
கல்வித்தகைமை :-
க.பொ.த (சா.த)பரீட்சையில் சித்தியுடன் மற்றும் கணிதம் பௌதீகவியல், விஞ்ஞானம் என்பவற்றுடன் 3 விஞ்ஞான பாடங்களில் சித்தி, தொழில்சார் தகைமையை பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத்திகதி:- 27.01.2014
================================================
2013.12.29 அன்று வெளி வந்த தினகரன்
இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கம் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
01) தொகை அளவீட்டாளர்
கல்வித்தகைமை :-
தொகை அளவீட்டில் விஞ்ஞான மானிப்பட்டத்துடன் அளவுக்குறிப்புகள் மற்றும் ஏனைய ஒப்பந்த ஆவணங்களை மொழிபெயர்த்தல்/ சிசில் வீதி வேலை ஒப்பந்தங்களுக்கான கட்டணப்பரப்புதல், கட்டணங்கள் உரித்துக் கோரிக்கைகள் மற்றும் வேறுபாடுகளை மதிப்பிடல், பாரிய வீதி வேலைகளை அளவிடுதல் மற்றும் பணக்கொடுப்பனவு சான்றிதழ்களை தயாரித்தல் போன்றவற்றில் 5 வருட அனுபவம்.
சம்பளம் :- 2007 ம் ஆண்டின் 33 ம் இலக்கம் மற்றும் 2011ம் ஆண்டின் 46 ம் இலக்க முகாமைத்துவ சுற்றறிக்கைகளின் பிரகாரம் சம்பளம் வழங்கப்படும்
விண்ணப்ப முடிவுத்திகதி:- 10.01.2014
================================================
2013.12.29 அன்று வெளி வந்த தினகரன்
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தலைமைக் கணக்காளர்
கல்வித்தகைமை:-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் வியாபார நிர்வாகம்/முகாமைத்துவம்/ வர்த்தகம் துறையில் பட்டத்துடன் சம்மந்தப்பட்ட பட்டப்படிப்பை/ ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் நிறுவனம் ஒன்றில் (CA, CIMA,ACCA) உறுப்புரிமையைப் பெற்றிருத்தல்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.