Brilliant people - வானத்தை அலங்கரித்த வண்ணப் பட்டங்கள், மக்கள் வெள்ளத்தால் நிரம்பிய உதயசூரியன் கடற்கரை – என்னும் கடந்த தைப்பொங்கல் தினமன்று வல்வையில் நடைபெற்றிருந்த பட்டபோட்டி பற்றிய எமது செய்திக்கு, பட்டப்போட்டியில் பங்கெடுத்தவர்கள், ஏற்பாட்டாளர்கள் பற்றி வாசகி குலன் நுவிஷா என்பவர் ஐக்கிய இராசியத்திலிருந்து தனது கருத்தைப் (Comment) இவ்வாறு தான் எமது இணையத்தின் குறித்த செய்தியில் பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலப் புதுவருட தினத்தன்று வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் கலை விழா, திருவெம்பாவை எழுச்சிப் பாடல்கள், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் அன்று வல்வைச் சந்தியில் எடுக்கப்பட்டிருந்த பொங்கல் விழா,
உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்றிருந்த மாபெரும் பட்டப்போட்டி, அதே தினம் மாலை விநாயக முகூர்த்தங்கள் சேகரிக்கப்பட்டு ஆழியில் கரைக்கப்பட்ட விழா போன்றவை இலங்கையில் பல இடங்களில் அங்கொன்று இங்கொன்றாக
நிகழ்ந்தாலும், ஒரே ஊரில் இவை நடைபெற்றிருப்பது வல்வையில் மாத்திரமாகத்தான் இருக்கமுடியும்.
ஓரிரு சேறு பூசும் சம்பவங்கள் அங்கொன்று இங்கொன்றாக ஓரிருவரின் சேவை என்ற சுயநலங்களால் நிகழ்ந்தாலும், அவற்றை எல்லாம் மேவுமளவுக்கு மேற்குறித்த நிகழ்வுகள் வல்வைக்குப் பெருமை சேர்க்கின்றன என்பதில் ஐயமில்லை.
இதிலும் குறிப்பாக வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும்
வண்ணப் பட்டப்போட்டி 50, 100 களைத்தாண்டி சில ஆயிரக்கணக்கானவர்களை வரவழைத்திருந்ததுடன், கிட்டத்தட்ட அனைத்து வல்வையின் புலம்பெயர் மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
குறித்த போட்டியின் எமது செய்திக்குக் கிடைத்த விமர்சனங்களும், தைப்பொங்கல் தினத்தன்றும், அதற்கு மறுதினமும் எமது தளத்தைப் பார்வையிட்டிருந்த மிகவும் ஏறுமுகமான வாசகர்களின் எண்ணிக்கையும் இதற்குச் சான்று.
இதற்காக உழைத்தவர்களுக்கு - போட்டியாளர்களுக்கு, ஏற்பாட்டாளர்களுக்கு, அவர்களை பெரிதும் அறிந்திராத, முகம் தெரியாத வாசகியினால் ஒரு அபிவிருத்தியந்த நாட்டில் இருந்த கொடுக்கப்பட்ட விமர்சனம் தான் - இவர்கள் “Very
nice Brilliant people”. இது ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகத் தெரியவில்லை. மாறாக இது மிகவும் பொருத்தமானது.
வல்வெட்டித்துறை பல வரலாறுகளைக் கொண்டது. பல கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கும், கதைகளுக்கும், தொடர் கதைகளுக்கும் எனப் பலவற்றுக்கும் தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. அந்த வகையில் ஒன்று தான் நடைபெற்றிருந்த
பட்டப்போட்டியும்.
சரியான புவியீற்பு மையம், இருபரிமானம் தவிர முப்பரிமானம், வானில் பறக்கவிடக்கூடிய மிகக் குறைந்தளவு பாரம், ஒன்றிலிருந்து இன்னொன்று மாறுபடல், தொடர்ந்து வானில் தக்கவைத்திருக்கக்கூடிய தன்மை, சுழற்சிகள் என்று பல விடயங்களை உள்ளடக்கி பட்டங்கள் செய்யப்பட்டு போட்டியில் பறக்கவிடப்பட்டிருந்தன.
“Made in China” என இங்கு தலைநகரில் விற்பனையாகும் பட்டங்களை, இவை தூக்கி எறியுமளவுக்கு இருந்திருந்தன என்பதை யாரும் மறுதலிக்க முடியாது. இதைச் செய்தவர்கள் நிச்சயம் Brilliant people தான், சந்தேகமில்லை.
இந்தப் பெருமைக்குக் காரணமானவர்கள், நிகழ்ச்சியை நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்த வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தினர் தான். இந்தா பிடி என்று போட்டியை நடத்தாமல், பல நாட்களுக்கு முன்னரே அறிவிப்புச் செய்து,
உதயசூரியன் கடற்கரையை இயன்றளவு திருத்தி மிகநேர்த்தியாக போட்டியை நடாத்தியிருந்தார்கள்.
“போட்டிக்கான விதிமுறைகளையும், புள்ளியிடும் திட்டத்தையும் முன்னரே அறிவித்தால் நன்றாக இருக்கும்’ என இன்னொரு வாசகரும் கவனிக்கத்தக்க கருதொன்றைச் சொல்லியிருக்கின்றார். இவை போன்றவற்றை ஏற்பாட்டாளர்கள்
கவனத்தில் எடுத்து, அடுத்த முறை போட்டியை மேலும் சிறப்பாக நடாத்த வேண்டும்.
போட்டிக்கு என்று மட்டும் அல்லாமல், உதயசூரியன் கடற்கரை போன்றவற்றை நிரந்தரமாகவே அழகாக வைத்திருக்கக் முயற்சிக்க வேண்டும். வல்வையின் பேராசிரியர் ஒருவரினால் ஓரிரு வருடங்கள் முன்பு 1 $ திட்டம் எனத்தீட்டப்பட்ட
அழகான கருப்பொருளில் வல்வைப் பிரதேசத்தின் கடற்கரைகளை அழகுபடுத்தும் திட்டமும் அடங்கியிருந்தது. இது ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டது.
மேற்கூறப்பட்ட போட்டிகள், விழாக்கள் தவிர இவை போன்ற மாற்றுச் சிந்தனைகள் முன்வைக்கப்பட்டு சாத்தியமுள்ள பல விடயங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் நாம் மேலும் Brilliant people ஆக, எல்லோருக்கும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.