தாய் ஜெயவாணி, மற்றும் இரு பிள்ளைகளின் உடல்கள் இன்று லண்டனில் தகனம், ஜெயவாணி யாழ்பல்கலைக்கழகத்தில் படித்திருந்தார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 29/01/2014 (புதன்கிழமை)
லண்டனில் கடந்த 9 ஆம் திகதி அகால மரணமடைந்த தாய் ஜெயவாணி, மற்றும் 2 பிள்ளைகளான அநோபன், நதீபன் ஆகியோரின் இறுதிக் கிரியைகள் இன்று 29 ஆம் திகதி முற்பகல் லண்டனில் நடைபெற்றது.
மக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 07.45 இலிருந்து 09.45 வரை லண்டனின் Morden Assembly Hall ,Tudor Drive ,SM4 -4PJ என்ற முகவியில் வைக்கப்பட்டு, அதன் பின்னர் காலை 10.15 மணியளவில் இறுதிக்கிரியைகள் Lambeth Cemetery Black shaw Road Tooting Sw17- 0OBY ( Georges Hospital க்கு அருகில்) என்ற முகவரியில் நடைபெற்றது.
முதலில் ஜெயவாணி அவர்களின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு பிள்ளைகளான அநோபன் மற்றும் நதீபன் ஆகியோரின் பூதவுடல்கள் ஒரே இடத்தில் அருகருகே புதைக்கப்பட்டது.
கடும் குளிர், மற்றும் மழையினைப் பொருப்படுத்தாது ஆண்கள், பெண்கள் என இறுதிக்கிரியைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமது அஞ்சலியினை செலுத்தியிருந்தார்கள்.
அகாலமரமானமடைந்த ஜெயவாணி யாழ்பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முன்னர் மேற்கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.