வல்வையைச் சார்ந்த திரு.க.அரவிந்த் இதனுடைய தயாரிப்பில் உருவாக்கப்பட்டு கடந்த 28 ஆம் திகதி தமிழகத்தில் திரையிடப்பட்ட பனிவிழும் மலர்வனம் என்னும் திரைப்படம் பற்றிய திரை விமர்சனம் ஒன்று சினிமாத் தளங்களில் ஒன்றான கிசுகிசு.com இல் வெளியிடப்பட்டுள்ளது.
பனிவிழும் மலர்வனம் - திரை விமர்சனம்
நடிகர் : அபிலாஷ்
நடிகை : சான்யதாரா
இயக்குனர் : ஜேம்ஸ் டேவிட்
இசை : ரஜின்
ஓளிப்பதிவு : ராகவ்
அம்மா பாசத்தை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் ஒரு படம் தான் ‘பனிவிழும் மலர்வனம்’ என்றாலும், அம்மா பாசத்தை இதுவரை யாரும் சொல்லாத ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் அபிலாஷும், நாயகி சானியா தாராவும் பேஸ்புக்கில் நண்பர்களாகி, பிறகு காதலர்களாகிறார்கள். மூன்று மாதமாக காதலிக்கும் இவர்களது காதலுக்கு, இவர்களுடைய பெற்றொர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவர்களுடைய எதிர்ப்பை மீறி, இருவரும் ஊரை விட்டு ஓடிவிடுகிறார்கள். விட்டிலிருந்து வெளியேறியதும் எங்கு செல்வதென்று தெரியமால் முதலில் வருகிற பேருந்தில் ஏறிவிடலாம் என்று சொல்லி தேனிக்குச் செல்கின்றனர்.
அங்கு, ஹீரோவும், ஹீரோயினும் மலைப் பிரதேசத்தில் மலைவாழ் பெண்ணொருத்தியின் வீட்டில் அடைக்கலம் புகுகிறார்கள். அப்பெண்ணின் மகனுக்கு ஒரு நோய். அந்த சிறுவனுக்கு நோய் தீவிரமாக, ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வரும் வழியில் காட்டுப்புலியின் கண்ணில் பட, அது இவர்களைத் துரத்துகிறது. அப்போது மூவரும் மரத்தின் மேலேறிக் கொள்ள புலியோ நாள்கணக்காக அங்கேயே இவர்களை அடித்து சாப்பிடக் காத்திருக்கிறது. சிறுவன் மரணத்தை நெருங்க அவன் தாய் விபரீத முடிவெடுக்கிறாள். இறுதியில் சிறுவன் காப்பாற்றப்பட்டானா, ஹீரோ ஹீரோயின் காதல் என்னவானது என்பதே கதை.
இடைவேளைவரையிலும் வழக்கமான காதலர்களின் கதையாகவே போய்க் கொண்டிருக்கும் சூழலில் திடீரென்று என்ட்ரியாகும் புலியால் திரைக்கதை பெரும் சுவாரசியமாகிறது. தத்ரூபமாக நிஜ புலியை வைத்து அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் நம்மையும் மிரளவே வைக்கிறது. புலியா, மனிதர்களா என்பது தான் கிளைமாக்ஸ்.
நாயகன் அபிலாஷ் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். முடிந்தவரை தனக்கான வேலையை சிறப்பாக செய்ய முயற்சித்திருகிறார். சானியாதாரா வெள்ளந்தியான சிரிப்பில் மனத்தைக் கொள்ளை கொள்கிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட் காட்டினால் கண்டிப்பாக முன்னணி ஹீரோயினாக வாய்ப்புண்டு.
கையில் சிறுவனுடன் கயவர்களுடன் போராடி காதல் ஜோடிகளை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்துச் செல்லும் மறத் தமிழச்சியாக ஒரு புறம், நோய்வாய்ப்பட்டு ஆபரேஷனுக்காக காத்திருக்கும் சிறுவனின் தாயாக மற்றொரு புறமென படம் பார்ப்பவர்களின் மனதில் பதிகிறார் வர்ஷா. தன் மகனின் உயிர் காக்க வர்ஷா எடுக்கும் முடிவு நெகிழவைக்கிறது. தன் குழந்தையை மட்டுமின்றி புலிக்குட்டியையும் அவர் காப்பாற்றுகிறார் என்று காட்டியிருப்பது தாய்மையின் உச்சம். மற்றும் அந்த சிறுவன் சாய் விஷால், பாவா லட்சுமணன் ஆகியோர் கதைக்குத் தேவைப்பட்டிருக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் டேவிட். இயக்குனர் திரைக்கதைக்கு முக்கியத்துவும் கொடுத்தாரோ இல்லையோ ஒளிப்பதிவிருக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தேனி மாவட்டத்தைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் முழுப் படத்தையும் படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் என்.ராகவ்வின் கேமரா, காட்டியும், காடு சார்ந்த பகுதிகளையும் ரொம்ப அழகாக காட்டியுள்ளது. பி.ஆர்.ரஜின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
படம் பார்த்து விட்டு வெளியில் வரும் அனைவரின் மனதிலும் கதையின் நாயகனாகவும், நாயகியாகவும் நிற்பது புலியும், வர்ஷாவும் மட்டுமே.
தாயன்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் பொதுவானது. தாய்மையின் சிறப்பையும், பெற்றோர்களின் மகத்துவத்தையும் உணர்த்தியிருக்கும் இந்தப் படத்தை கண்டிப்பா குடும்பத்தோட பார்க்கலாமுங்க.
மொத்தத்தில் பனிவிழும் மலர்வனம், முன்பாதி புலி உறுமல். பின்பாதி புலிப் பாய்ச்சல்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.