கல்வி பொதுத் தராதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 30ஆம் திகதி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2012 (திங்கட்கிழமை)
கல்வி பொதுத் தராதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2013 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிவரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் 78 பாடசாலைகள் விடைத்தாள் திருத்தும் நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ளது.
அதன்படி குறித்த 78 பாடசாலைகளும் 2013 ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி 10ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.எனினும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறாத பாடசாலைகள் ஜனவரி 2 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
எனினும் தற்போது விஞ்ஞான பாட வினாத்தாள் ஏற்கனவே வெளியாகியமை குறித்தும் அதற்காக ஆசிரியர் ஒருவர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.