அடுத்துவரும் சில நாட்களுக்கு கனத்த மழை பெய்யும்! - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2012 (திங்கட்கிழமை)
நாட்டில் பல பிரதேசங்களில் பரவலாக பெய்துவரும் மழை காரணமாக அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் (Department of Meterology of Srilanka) கடமை நேர வானிலையாளர் பபோதினி கருணாபால நேற்று தெரிவித்துள்ளார் .
இலங்கைக்கு கிழக்காக வளி மண்டலத்தில் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதால், மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலை காரணமாக நாட்டில் பல பிரதேசங்களில் பரவலாக பெய்துவரும் மழையானது வடக்குப் பிரதேசத்திலும் பெய்ய கூடும் என தெரிவித்துள்ளார் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.