கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் நேற்றைய முன்தினம் சில மணி நேரத்திற்கு திறக்கப்பட்டிருந்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2012 (வியாழக்கிழமை)
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதால் வான் கதவுகள் நேற்றைய முன்தினம் சில மணி நேரத்திற்கு திறக்கப்பட்டிருந்தது.
மேலும் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதையும், குளத்தின் நீர் பாய்ந்தோடுவதையும், சுற்றுலா பயணிகள் இதனை பார்வையிடுவதையும் இப் படங்களில் காணலாம்.
இரணைமடுக்குளம் இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கம் ஆகும். 1902 இல் இரணைமடு கட்டுமானம் கட்டப்படத் தொடங்கியது. இரணைமடுவின் கொள்ளளவு 1 லட்சத்து 6500 ஏக்கார் அடி, ஆழம் 34 அடியாகும். 1977ல் தான் இப்போதுள்ள வான் கதவுகள் கொண்ட தோற்றத்தை இரணைமடு பெற்றது.
227 சதுரமைல்கள் நீரேந்து பரப்புக்கொண்ட இரணைமடுக்குளம் கனகராயன் ஆறு, கரமாரி ஆறு என இரு ஆறுகளின் மூலம் நீரைப் பெறுகின்றது. இந்த குளமானது 9 கிலோ மீற்றர் நீளமும், அணை 2 கிலோ மீற்றர் நீளமுடையது. இதன்மூலம் 20 882 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெறுகின்றது.
மொத்தம் 32.5 மைல்கள் நீள வாய்க்கால்கள் மூலம் இரணைமடுக்குளம் கிளிநொச்சியை வளப்படுத்துகின்றது. இரணைமடு மூலமே கிளிநொச்சியில் பெருமளவில் குடியேற்றங்கள் நடந்தன.
சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடுப் படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.