வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் எண்ணைக்காப்பு மற்றும் மஹாகும்பாபிஷேகம் எதிர்வரும் 29, 30.06.2014 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளன. இது சம்பந்தமாக ஆலய பரிபாலன சபையினர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் பாலஸ்த்தாபனம் செய்யப்பட்டு
புணருத்தான திருப்பணி வேலைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
எதிர்வரும் 29.06.2014 (ஆனி – 15) எண்ணெய்க்காப்பு நடைபெற்று, 30.06.2014 (ஆனி - 16) அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளதனால் விநாயகர் அடியார்களிடமிருந்து திருப்பணிவேலைகளுக்கான நிதி உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருப்பணிவேலைகளின் படங்களும் ஆலயப்பரிபாலனசபையினரால் வெளியிடப்பட்ட நிதி வேண்டுகோள் பிரசுரமும், 2014-2015 ஐய வருஷ விசேஷடஉற்சவங்கள் பற்றிய பிரசுரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
திரு.செ.காஞ்சிமாவடிவேல் அவர்களின் நிதிப்பங்கணிப்புடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நீர்த்தாங்கி.
திரு.தண்டபாணிகதேசிகர் மாதவன் அவர்களின் நிதிப்பங்கணிப்புடன் புதிதாகச் செய்யப்பட்டுவரும்
கோபுரவாசற் கதவு.
திரு.இராமநாதன் மேத்திரியார் குடும்பம், திரு.சூரியமூர்த்தி பெண் சுகுணா பிள்ளைகள், மற்றும்திரு.மௌ.செல்வகுரு ஞாபகார்த்தமாக அவர்தம் மனைவி ஆகியோரது நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வரும் மேற்குப்புற அலங்கார சிற்பங்களுடன்கூடிய மண்டபம்.
புதிதாக அமைக்கப்பட்டுவரும் யாகசாலை மற்றும் அதற்கு மேலான அலங்கார சிற்ப வேலைகள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.